தமிழக மீனவர்கள் படகை இலங்கை கடற்படை மூழ்கடிப்பு !

தமிழக மீனவர்கள் படகை இலங்கை கடற்படை மூழ்கடிப்பு !
X

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 மீனவர்களைக் காணவில்லை என கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (18 ம் தேதி) 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா (30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32), ஆகிய நான்கு மீனவர்கள் சென்றனர்.பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நெடுத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு 2 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர் படகு மீது முட்டி மோதியதில் படகு சேதமடைந்து மூழ்கத் தொடங்கியது. இதை அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் அலறல் குரலில் தெரிவித்தும் மற்ற படகில் இருந்த மீனவர்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என தெரிகிறது. இதுவரை மீனவர்கள் கரைக்கு வந்து சேரவில்லை.

இதுகுறித்து இலங்கைக்கடற்படை கூறுகையில்: மீனவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்றும், எல்லை தாண்டி மீன்பிடித்த அந்தப் படகை நாங்கள் பிடிக்க முற்பட்டபோது எங்களிடம் பிடிபடாமல் அந்தப்படகு தப்பிச்செல்கையில் எங்கள் இரு கப்பல்கள் மீது மோதி சேதப்படுத்தி விட்டு இந்திய கடற்பகுதிக்குள் விரைந்து சென்று விட்டது. படகு சேதமடைந்துள்ளதால் நீண்டதூரம் செல்ல முடியாமல் படகு மூழ்கும் அபாயம் உள்ளதால் இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல்கள் நீர்மூழ்கி வீரர்களுடன் மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!