கேரளா கோழிகள் தமிழகம் வருவதற்கு தடை விதிப்பு

கேரளா கோழிகள் தமிழகம் வருவதற்கு தடை விதிப்பு
X

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் பறவைக்காய்ச்சலால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிமீ தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பறவை காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story