நெல் பயிர் செய்த விவசாய நிலத்தில் ஜேசிபி கொண்டு நாசம் – மின் வாரியம் மெத்தனம்

விவசாய நிலத்தில் அனுமதியின்றி, உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை அடுத்த பாலானந்தல் கிராமத்தில் உள்ள விவசாயி பாலமுருகன். தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். தழைத்து வந்த சமயத்தில் நேற்று எந்த வித முன் அறிவிப்பும் இன்றி வந்த ஜேசிபி இயந்திரம் விவசாய நிலத்தில் இறங்கி நாசம் செய்தது.

நெல் நடவு நடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் அனுமதியின்றி மின் கோபுரம் அமைக்க, பயிர்களை நாசம் செய்வதை பார்த்து விவசாயி பாலமுருகன் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த மற்ற விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பின்பு பணி தொடங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

அப்போது பேசிய விவசாயி, "அனுமதியின்றி உயர் மின் பணியை ஜேசிபி இயந்திரம் எடுத்து சென்று பணி தொடங்கினர். விவசாயிகளிடம் முறையாக அனுமதி பெற்று அவர்களுக்கு தேவையான இழப்பீடு தொகையை வழங்கி கணக்கில் செலுத்திய பின்பு பணியை தொடங்க வேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு முன்னதாக இப்படி விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைத்த விவசாயிகளுக்கு இது வரை எந்த இழப்பீடும் வழங்கவில்லை, மின் வாரியம் அலட்சியத்தை விவசாயிகளிடம் காட்டக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!