முதல்வராகும் யோகம் ஸ்டாலின் ஜாதகத்தில் இல்லை - ஹெச்.ராஜா

முதல்வராகும் யோகம் ஸ்டாலின் ஜாதகத்தில் இல்லை -  ஹெச்.ராஜா
X

முதல்வராகும் யோகம் ஸ்டாலின் ஜாதகத்தில் இல்லை என பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வேலுநாச்சியாருக்கு அஞ்சலி செலுத்தியபின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. பாடத்திட்டங்களில் நம்முடய வரலாறுகள் இடம் பெறும்படி அமைக்கப்படும். ஸ்டாலின் மக்களை சந்திக்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மக்கள் முடிவாக உள்ளனர். ஸ்டாலின் முதல்வராகலாம் என்பது நடக்காது. அது அவருடைய ஜாதகத்திலும் இல்லை என்றார். மு.க.அழகிரி நேரடி அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

சுயசார்பு இந்தியாவில் உலக நாடுகள் அனைத்தும் தடுமாறி கொண்டிருக்கும்போது ஆனால் இந்தியா அதில் இருந்து மீண்டுகொண்டிருக்கிறது. தன் கட்சியை நடத்துவதற்கே வழியில்லாதவர் இந்திய பிரதமரை பற்றி பேசுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.பேட்டியின் போது ராஜா உடன் சிவகங்கை தேர்தல் பொருப்பாளர் மேப்பல் சக்தி மற்றும் ஏராளமான கட்சியினர் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!