தமிழக அரசிற்கு இந்த விஷயங்களுக்காக விருது வழங்குகிறேன் : கமல்ஹாசன்

தமிழக அரசிற்கு இந்த விஷயங்களுக்காக விருது வழங்குகிறேன் : கமல்ஹாசன்
X

தமிழக அரசிற்கு ஊழலிலும் மாநில உரிமை விட்டுக்கொடுத்ததில் முதலிடம் விருது அளிக்கிறேன் என விழுப்புரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் பங்கேற்ற அக்ஙகட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,குடும்பத்தையே கொத்தடிமையாக வைக்கும் நிலையும், கந்துவட்டி கொடுமையும் இங்கே நிகழ்கிறது.இந்த நிலைமை வெகு நாள் நீடிக்காது. நாட்டை வெள்ளையர்களே ஆண்டு இருக்கலாம் எனச் சொல்பவர்கள் பேச்சு உண்மை என்ற நிலைமை இப்போது உள்ள கொள்ளையர்களால் வந்துள்ளது. வெள்ளையர்கள் போய் கொள்ளையர்களிடம் தற்போது நாடு சிக்கியுள்ளது.

உங்கள் குறைகளை தீர்த்து விட்டு கைத்தட்டல்களை நாங்கள் பெறுவோம். தமிழகம் சிறந்த மாநிலம் என விருது பெற்றதாக சொல்கிறார்கள். ஊழலிலும் மாநில உரிமை விட்டுக்கொடுத்ததில் முதலிடம் என்று நான் உங்களுக்கு விருது அளிக்கிறேன்.என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர் எனது வெள்ளை அறிக்கையில் ஒன்றுமே இருக்காது.இந்த பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை இப்போது விலை என்ன?.இவர்களையெல்லாம் அகற்றுவதற்கு நீங்கள் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா