தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் ஆளுனரிடம் மு.க. ஸ்டாலின் வழங்கல்

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் ஆளுனரிடம் மு.க. ஸ்டாலின் வழங்கல்
X

தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆளுநர் புரோகித்திடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.மேலும் அமைச்சரவை மீது ஊழல் புகார்களையும் ஆளுநரிடம் அவர் அளித்தார்.ஆளுநர் உடனடான சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!