திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்களும் வந்து பிரச்சாரம் செய்தாலும் எடப்பாடியில் திமுக வெற்றிபெறாது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்களும்  வந்து பிரச்சாரம் செய்தாலும் எடப்பாடியில் திமுக வெற்றிபெறாது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
X

திமுகவில் கனிமொழி அல்ல திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்களும் எடப்பாடியில் வந்து பிரச்சாரம் செய்தாலும் திமுக வெற்றிபெறாது என பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பெரிய சோரகை பகுதியில் இன்று சட்டமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக அரசை விமர்சனம் செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் நல்லது நடக்கும் செயலை அதிமுக அரசு செய்து வருகிறது இருப்பினும் அதற்கு மாற்றாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.மேலும் அதிமுக அரசின் சாதனை பட்டியலிட்ட முதல்வர், எடப்பாடி தொகுதி அதிமுக வின் எஃகு கோட்டை எனவும் இது வரை திமுக வெற்றி பெறாத தொகுதியாக எடப்பாடி தொகுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

கனிமொழி எடப்பாடி வந்தபொழுது அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என பேசி இருக்கிறார் வேண்டும் என்றால் அவரை இங்கு வந்து போட்டியிட சொல்லுங்கள் யார் வெற்றி பெறுவார்கள் என பார்க்கலாம் . எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது.திமுகவில் கனிமொழி அல்ல திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்களும் எடப்பாடியில் வந்து பிரச்சாரம் செய்தாலும் திமுக வெற்றிபெறாது எனவும், மற்றும் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக உள்ளது எனவும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பொதுமக்கள் தங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் உழைப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!