இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடங்கியது

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி   திருச்சி அரசு மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை தொடங்கியது
X

திருச்சி அரசு மருத்துவமனை

பூஞ்சை காளான் தொற்றுக்கு அறுவை சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை-இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி- அறுவை சிகிச்சைகள் தொடங்கியது
பூஞ்சை காளான் தொற்றுக்கு அறுவை சிகிச்சைகள் எதுவும் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை
https://www.instanews.city/tamil-nadu/news-915850

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி-திங்கட்கிழமை முதல் அறுவை சிகிச்சைகளை தொடங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரும்பூஞ்சை நோய்க்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதில்லை என்கிற செய்தி நம்முடைய இன்ஸ்டாநியூஸ் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது- அதனுடைய செய்தி லிங்க் மருத்துவமனை மற்றும் திருச்சியில் பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பார்த்து விட்டு சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை அழைத்து பேசிய டீன் 'திங்கட்கிழமை அறுவை சிகிச்சைகளை தொடங்கிவிட வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தாராம்.

அதன்படியே திங்கட்கிழமை நேற்று இரண்டு நபர்களுக்கும் செவ்வாய்க்கிழமை இன்று ஆறு பேருக்கும் கரும்பூஞ்சை நோய்க்கான அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது, தற்போது முலும் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல திருச்சியில் வலம் வந்த செய்தியைப்பார்த்து திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையின் மருத்துவர் ஜானகிராமன் , 'கரும்பூஞ்சை நோய்க்கான அறுவை சிகிச்சைகளை எங்கள் மருத்துவமனையில் நான் இலவசமாகவே செய்து தருகிறேன்; அதற்கான மருந்து செலவுகளை மட்டும் நோயாளிகள் ஏற்றுக்கொண்டால் போதும். இந்த நோய்த் தொற்றுகாலத்தில் நம் மக்களுக்கு இதை ஒரு சேவையாக செய்ய நினைக்கிறேன்' என்று சொன்னார்.

நல்ல விஷயங்களை செய்யவேண்டியதில்லை; நாம் நினைத்தாலே போதும் என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் உதாரணமாக அமைந்து விட்டன. உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அவர்களுக்கும், தேடி வந்து உதவி செய்ய தயாராய் இருக்கும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையின் மருத்துவர் ஜானகிராமன் அவர்களுக்கும் எங்கள் இன்ஸ்டாநியூஸ் செய்தி குழுமம் சார்பிலும் இந்த செய்திகளை பகிர்ந்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு போன சொந்தங்கள் உங்கள் சார்பிலும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!