உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் யார்? யார்? சேவாக்கின் கணிப்பு..!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்
2023 உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப் பட்டுவிட்டதால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வலை பயிற்சியினைத் தொடங்கிவிட்டன. விளையாடவுள்ள அணிகள் தங்கள் விளையாட்டு யுக்தி குறித்த பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் போன்றவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றன.
world cup 2023
சுருங்கச் சொல்லப்போனால் போட்டியில் பங்கேற்கும் தயாரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இறுதிப்போட்டி நடப்பதற்கு இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், போட்டிகள் எப்படி இருக்கும்? யார் ஃபைனலுக்கு வருவார்கள் போன்ற யூகங்கள் மற்றும் கணிப்புகளும் பரவலாக வலம் வரத்தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், உலகக் கோப்பை வெற்றியாளருமான வீரேந்திர சேவாக், ஐசிசி நிகழ்வில் பேசும்போது, அவரும் ஒரு கணிப்பு குறித்த கருத்தை வெளியிட்டார். அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சேவாக், "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு வரும் போட்டியாளர்களாக இருப்பார்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து. கண்டிப்பாக இதில் இருப்பார்கள் என்பது எனது எண்ணம். ஏனென்றால் அவர்கள் விளையாடும் முறை அப்படி. அவர்கள் வழக்கமான ஷாட்களை விளையாடுவதில்லை. வழக்கத்திற்கு மாறான ஷாட்களை மட்டுமே விளையாடுகிறார்கள். இந்த 2 அணிகளும் அதில் சிறந்தவையாக இருக்கின்றன. மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளிலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை கொண்டுள்ள, துணை கண்டத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய அணிகளாகவும் இருக்கின்றன.
world cup 2023
இந்த நான்கு நாடுகளும் நிச்சயமாக அரை இறுதி போட்டிக்குச் செல்லும் மிக உயர்ந்த தரத்தைக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக செல்கிறது. மேலும் கேப்டன் இயன் மோர்கன் இல்லாவிட்டாலும் கூட ஜோஸ் பட்லரின் தலைமையில் அவர்களின் பேட்டிங் நம்பமுடியாத அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, போட்டியை வெல்வதற்கான அனைத்து திறன்களையும் கொண்டுள்ளது. மேலும் 5 முறை சாம்பியனான அவர்களுக்கு எப்படி விளையாடவேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. போட்டியின்போது என்ன தேவை என்பதை அவர்கள் தெளிவாக அறிவார்கள். இந்த நேரம் வரை ஆஸ்திரேலியா ODI போட்டிகளில் நம்பர் 1 தரவரிசையையும் பெற்றுள்ளனர்.
2019ம் ஆண்டில் மயிரிழையில் தவறவிட்ட வாய்ப்பை கேப்டன் பாபர் ஆசாமின் சிறப்பான ஆட்டத்தின் கீழ் தற்போது பாகிஸ்தான் நல்ல சமநிலையைக் கண்டுள்ளது. அதனால், அந்த அணியும் அரி இறுதிக்கு வரும் வாய்ப்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
world cup 2023
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சேவாக் ஒரு வீரராக இருந்தார். அவர் சச்சின் டெண்டுல்கருடன் தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங்கைத் தொடங்கினர். அந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக 47.50 சராசரியில் 380 ரன்கள் எடுத்த அவர் சதம் அடித்தார். அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான 38 (25) உட்பட, அவரது விறுவிறுப்பான தொடக்கங்கள், போட்டி முழுவதும் இந்தியாவிற்கு முக்கியமான உத்வேகத்தை அளித்தன என்பதை கிரிக்கெட் ரசிகர்களும் மறந்திருக்கமாட்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu