கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பிறந்தநாள் இன்று
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் சென்னையில் பிறந்தார். தனது 4 வயதிலே கிரிக்கெட் ஆடத் தொடங்கிய சுந்தர் இன்று வளர்ந்துவரும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். இவரது சகோதரி சைலஜாவும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார்.
சுந்தர் தனது முதல் தர கிரிக்கெட் கேரியரை 2016இல் தொடங்கினார். ரஞ்சி டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, 2017இல் திரிபுராவிற்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீலங்காவிற்கு எதிராக நவம்பர் 2017இல் அறிமுகமானார். எனினும் அந்தத் தொடரில் 16 வீரர்களின் பெயர் பட்டியலில் மட்டுமே சுந்தர் இடம்பெற்றிருந்தார்.
இவரின் முதல் டெஸ்ட் விக்கெட் ஸ்டீவ் ஸ்மித் ஆகும். அந்தப் போட்டியில் இவரும் ஷர்துல் தாகூரும் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தனர். அந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்தார்.
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu