டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி
X

இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி கால் இறுதிக்கு தேர்வாகியுள்ளார். .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சிலர் பதக்கம் பெறும் வாய்ப்பு இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்தியாவின் தீபிகா குமாரி கண்டிப்பாக பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதி மற்றும் அரையிறுதியில் தீபிகா குமாரி வென்றுவிட்டால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் தீபிகா குமாரிக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்