டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி
X
ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.


ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (23.07.2021) தொடங்கியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளின் குரூப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கியது.

போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய 6 வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ரசல் முதல் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

ஆட்டத்தின் 2-வது பகுதி தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் 26 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.

4-வது பகுதியில் எந்த வீரர்கள் கோல் அடிக்கவில்லை இரு அணிகளும் சிறப்பான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்தியா 3 கோல்கள், நியூசிலாந்து அணி 2 கோல்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் நியூசிலாந்து அணியுடனான ஏ பிரிவு போட்டியில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


கடைசி நேரத்தில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தின் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளைத் தடுத்துள்ளார். இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்களும், ஆர்.பி. சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு உதவினர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். லீக் சுற்றில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil