விநாயகர் முன் தலையில் நாம் குட்டிக் கொள்வது ஏன்? அட, இவ்வளவு பலன்களா?

விநாயகர் முன் தலையில் நாம் குட்டிக் கொள்வது ஏன்? அட, இவ்வளவு பலன்களா?
X
கோப்பு காட்சி
விநாயகப் பெருமான் முன்பு நின்று நாம் தலையில் குட்டிக் கொள்வது ஏன்? இதில் ஆன்மீகமும் அறிவியலும் அடங்கியுள்ளது

விநாயகரை வழிபட, நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டு சுலோகத்தைச் சொல்வது வழக்கம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சசிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸன்ன வதனம் த்யாயேத்

ஸர்வ விக்னோப சாந்தயே ||

இந்த சுலோகத்தில் வினாயகரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1. சுக்லாம் பரதரம் : வெண்மையான ஆடை உடுத்தவர்.

2. விஷ்ணும் : எங்கும் நிறைந்தவர்.

3. சசி வர்ணம் ; நிலவு போன்ற ஓளி நிறத்தினர்.

4. சதுர்புஜம் : நான்கு கைகள் உள்ளவர்.

5. ப்ரஸன்ன வதனம்: நல்ல மலர்ந்த முகமுள்ளவர்.

இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டாக, ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.

மஹா கணபதியை தியானித்து, உச்சந்தலையில் உள்ள அமிருதம், எல்லா நாடிகளிலும் இறங்கிப் பாய்வதாக எண்ணி, வலது கையை இடது கையின் முன் வைத்து, வலது கையால் இடது முன் தலையிலும், இடது கையால் வலது முன் தலையிலும் முஷ்டிகளால் மெதுவாகக் குட்டிக் கொள்வது முறை.

குட்டுவது ஏன்?

விநாயகர், காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து, காவிரி நதி பெருக்கெடுத்து ஓடுமாறு செய்தார். பின் காக்கை வடிவம் நீங்கி, அத்தணச் சிறுவனாய் மாறினார். அவனது தலையில் குட்டுவதற்காக அவனைத் தூரத்திச் சென்றார் அகஸ்தியர்.


பின்னர், விநாயகர் தமது உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால், தம் நெற்றியில் குட்டிக் கொண்டார் அகஸ்தியர். "உமது திருமுன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும்," என்று அகஸ்தியர் வேண்டினார்.


அறிவியல் காரணம்

விநாயகப் பெருமானும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில், முன் தலையின் இருபுறங்களிலும் TEMPLAR LOBE உள்ளது. இந்த இடத்தில்தான் ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டிவிடப்படுகின்றன.

இதனால் உடம்பில் சுறுசுறுப்பும், உள்எழுச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில்ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டிப்பது வழக்கம். நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாகத் திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுவர்.

இன்று சங்கடஹர சதுர்த்தி நாமும் விநாயகர் முன் தலையில் குட்டிக் கொண்டு எல்லா வளமும் நலமும் பெற வழிபடுவோம்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!