காக்கவாக்கத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் துவக்க விழா
பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் கிராமத்தில், கலச விளக்கு வேள்வி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தில்,மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், மாவட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் டில்லிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தண்டலம் புவனேஸ்வரிரவி, காக்கவாக்கம் செல்லமுத்து, திமுக கிளைச் செயலாளர் எம்.முருகன்,ஊர் பெரியவர்கள் ஆறுமுகம், மாரிமுத்து,குப்பையா,ஏழுமலை, மூர்த்தி, பன்னீர்,முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மன்றத்தின் தலைவர் அமுதாமகாலிங்கம், செயலாளர் சுதர்சனாதேவி கண்ணதாசன், பொருளாளர் லதாபாபு தலைமையில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu