சரியான வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்..! ஒரு அனுபவக் கதை..!

சரியான வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்..! ஒரு அனுபவக் கதை..!
X

கணவன்-மனைவி (ஓவியம்)

ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்.

திருமணமான முதல் நாள் இரவு நானும் என் கணவரும் படுக்கைக்குத் தயாரான போது கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. அது வேறு யாரும் அல்ல அத்தையின் குரல்., "குழந்தை, வெளியே வா."

நான் விரைவாக ஆடையை அணிந்துகொண்டே , இது என்ன மாதிரியான ஒரு செயல் என்று யோசித்துக்கொண்டே படுக்கை அறையைவிட்டு வெளியே வந்தேன். நான் வெளியே வந்தவுடன், "இன்னைக்கு உன் முதல் இரவு, எல்லாத்தையும் நல்லா செய்யற பொறுப்பு உன்னிடம்தான் இருக்கு. பாபு இன்னும் முதிர்ச்சியடையாதவன்" என்றாள்.

நான் வெட்கத்துடன் யோசிக்க ஆரம்பித்தேன், “நாலு மாசம் போனில் பேசியபோதே உங்கள் பாபு எவ்வளவு முதிர்ச்சியடையாதவன் என்று எனக்குப் புரிந்துபோனது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு “சரிங்க அத்தை ” என்றேன்.

அத்தை என்னிடம் , "சீக்கிரம் எனக்கு ஒரு பேரன் அல்லது பேத்தியைக் கொடுங்கள். இப்போது நல்ல காரியங்களை தள்ளிப்போடவேண்டாம்."என்றார்.

சரி, என்று நான் என் அறைக்கு வந்தபின்னர் என் கணவருடன் குறும்பு பேசினேன். பின்னர் என்ன நடக்கப்போகிறது? ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் ஆசி கூறும்போது, ​​“எனக்கு சீக்கிரம் குழந்தை கொடு” என்று சொல்வாள். இதைக்கேட்கும்போது முன்பு எனக்கு வெட்கமாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல இதைக் கேட்டு எரிச்சல் அடைய ஆரம்பித்தேன்.

இப்படி மாதங்கள் ஓடின..

கணவருடன் குழந்தை பெறுவது சம்பந்தமாக பேசினேன்.

ஒரு நாள் என் கணவரிடம் சொன்னேன், "டாக்டரைச் சந்தித்து குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து யோசிப்போம். கல்யாணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது." என்றேன்.

"உனக்கென்ன பைத்தியமா? கல்யாணத்துக்கே இவ்வளவு செலவு ஆயிடிச்சு. குழந்தைப் பொறுப்பு என்பது பெரிய பொறுப்பு, யார் என்ன வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடு " என்று கோபமாக பதிலளித்தார்.

எனக்கும் கோபம் வந்தது, "நீங்க நாள் முழுக்க வீட்டை விட்டு வெளிய இருக்கீங்க. நான் சொல்றதை கேட்கணும். வீட்டுல அத்தைக்கு எல்லோரும் போன் பேசுவாங்க, வருஷத்துக்கு ஒருமுறை போன் செய்பவர்கள் கூட, வணக்கம் சொல்லிட்டு, என்ன எதுவும் விஷேசம் இல்லியா? என்று நேரடியா கேட்கிறாங்க. மருமகளுக்கு ஏதாவது பிரச்சனையா?' என்றும் கேட்கிறாங்க. இப்படி கேட்கும் எல்லோருக்கும் நான் எப்படி பதில் சொல்வது?"

இப்படித்தான் முதல்முறையாக இருவருக்கும் ஒரு போராட்டம் வெடித்தது.

மாமியார் மற்றும் மாமியார் கலவரத்தை ஆசுவாசப்படுத்தி அடக்கினார்கள்.

பிறகு ஒரு நாள் என் மாமியார் அவரது மகனிடம் , "மகனே, சீக்கிரம் ஒரு குழந்தை பெற்றுக்கொள். ஏதாவது பிரச்சனை என்றால் வெளிப்படையாக பேசுங்கள். நாம டாக்டரிடம் பேசுவோம்" என்று விளக்க ஆரம்பித்தார்.

நானும், "எனக்கு குழந்தை வேணும், ஆனால் உங்கள் மகனுக்கு குழந்தை வேண்டாமாம் " என்றேன்.

இப்படி நான் கூறியதும் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. எப்படியோ என் புத்திசாலியான மாமனார் விளக்கி விஷயத்தை அத்தோடு வளராமல் முடித்தார். இரண்டு மூன்று நாட்களாக யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் ஒரு நாள் மாலை மீண்டும் அதே பிரச்சினை வந்தது.

என் கணவர் சொன்னார், "இப்போது நான் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை."

அம்மா உடனே, "ஒரு குழந்தைக்கு என்ன கோடி ரூபாயா செலவழிப்போம்? நீ பிறந்தப்ப உன் அப்பாவின் சின்ன வேலையில் கிடைத்த சொற்ப வருமானத்தில் மூன்று குழந்தைகளை வளர்த்துவிட்டேன்" என்றார்.

என் கணவரிடம் இருந்து பதில் இல்லை. அப்போது என் மாமனார் குறுக்கிட்டு, "எனக்கு வருமானம் குறைவு, ஆனால் எங்களின் செலவும் குறைவாக இருந்தது. அதனால்தான் அன்று குழந்தைகளை வளர்க்க முடிந்தது என்றார்.

மாமனாரின் ஞானம்..

"முன்பு எங்கள் தேவைகள் குறைவாகவே இருந்தன. உணவு, உடை மற்றும் தங்குமிடம். இதைத் தவிர, வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் இன்று வாழ்வதற்கு உணவு, உடை, தங்குமிடம் மற்றும் இணையம் அவசியம். முன்பு வீடு முழுவதும் ஒரே தொலைபேசி மட்டுமே வேலை செய்தது. ஆனால் இன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் பல தொலைபேசிகள் மற்றும் ரீசார்ஜ்கள்.

“எங்கள் காலத்தில் இரண்டு பிள்ளைகள் பள்ளியில் படித்தால் ஒருவருக்கு முழுக் கட்டணமும் இன்னொரு குழந்தைக்கு பாதிக் கட்டணம் செலுத்தினால் போதும். அதே மூன்று பிள்ளைகள் படித்தால் இரண்டு குழந்தைகளுக்கு முழுக்கட்டணம் செலுத்திவிட்டால் போதும்.. மூன்றாவது குழந்தைக்கு கட்டணமே செலுத்தத் தேவை இல்லை. ஒருவருக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படும். பள்ளியில் ஒரே வேலை படிப்பு. உடை. , புத்தகங்கள், பிரதிகள் எங்கிருந்தும் வாங்கலாம். ஆனால் இன்று எல்லாவற்றையும் நான்கு மடங்கு விலை கொடுத்து அதே பள்ளியில் வாங்க வேண்டியுள்ளது.

"சாப்பாட்டுக்கு பருப்பு, சாதம், இட்லி, தோசை இருந்தால் போதும். பள்ளிக்கூடத்துக்கு பழைய சாதம் ஊறுகாய் எடுத்துச் செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் அடுத்தவர் வாழ்க்கையைப்பார்த்து போட்டிக்குக் குழந்தைகளுக்கு சிறப்பான சாப்பாடு கொடுக்க வேண்டும். முன்பெல்லாம் கடையில் சாப்பிடுவதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அல்லது ரெண்டு தடவை மட்டுமே. சில நேரங்களில் அதுவும் கிடைக்காது. ஆனால் இன்று நாம் வாரத்திற்கு இரண்டு முறை வெளியில் சாப்பிடுகிறோம்.

“அன்னிக்கு சுத்தமான கிணற்றில் குடிநீர் கிடைத்தது. இன்று காசுக்கு தண்ணீர் வாங்கிக் குடிக்க வேண்டியுள்ளது. காய்ச்சலாக இருந்தாலும் சரி, சளியாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கு வீட்டிலேயே கை மருந்தில் சரியாகிவிடும். ஆனால் இன்று குழந்தைகள் தும்மினாலும் டாக்டர்கள் ஸ்பெஷல் டிரீட்மென்ட் என்று ஆயிரக்கணக்கில் பில்லை நீட்டுகிறார்கள்.

“ஒரு காலத்தில் ஆட்டோவை பார்ப்பதே அரிது. சைக்கிளில் ஊர் முழுக்க வலம் வந்தோம். இன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மோட்டார் சைக்கிள் தேவை இருக்கிறது. யாரும் சைக்கிளில் பயணிக்க விரும்புவதில்லை.

மருமகளைப்பார்த்த மாமனார் "சாந்தி, இது கால மாற்றத்தின் விஷயம். பாபுவுக்கு இன்றைய நிதர்சனம் தெரிந்ததால் அவனுக்கு இப்போது குழந்தை வேண்டாம் என்கிறான். பாக்கெட் நிறைய பணம் இல்லை. ஆனால் நமது செலவுகள் அதிகரித்துவிட்டன. அதனால் கொஞ்சம் பணத்தை சேமிக்க அவனுக்கு நேரம் கொடுங்கள்." என்றார், மாமனார்.

சரியான திசையை நோக்கி

பாபுவோ , அப்பாவாகும் முன் நல்ல பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அதற்காக காலம் காத்திருக்காது. அதற்குள் ஒரு குழந்தையை பெற்றுக்கொடுங்கள். இல்லையேல் நீங்கள் உங்கள் குழந்தை 10ம் வகுப்பு படிக்கும்போது உங்களுக்கு வயதாகி ஓய்வுபெற்றுவிடுவீர்கள் என்று அத்தை ஒரு போடுபோட்டார்.

அதற்குப் பிறகு மீண்டும் வீட்டில் குழந்தைப் பேறு பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. என் கணவரும் நிலையைப்புரிந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொண்டோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வளர்க்கிறோம்.

வாழ்க்கைப் பாடம்

வீட்டின் பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், வீடு எப்போதும் சரியான திசையில் பயணிக்கும் என்பதற்கு எனது மாமனார் மற்றும் மாமியார் நல்ல உதாரணம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் அப்படியே இருக்கும். நமது செலவுகளையும் பொறுப்புகளையும் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் செய்திதான் இந்தக் கதை. இது நம் வாழ்க்கையை சிறப்பாக்குவது மட்டுமல்லாமல், நம் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

"சரி..சரி.. நாங்க பெட் ரூமுக்குள்ள போறோம்..." படிச்சிட்டீங்கல்ல, அடுத்த கட்டுரைக்குப் போங்க.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி