தனிப்படை காவல்துறையினர் அதிரடி சோதனை: கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது
கைது செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கி உரிமையாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தளி, இராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி மற்றும் அன்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமான நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
வேட்டையாடுபவர்கள் மற்றும் விவசாய நிலங்களில் சேதப்படுத்தும் விலங்குகளை அழிப்பதற்கு கள்ள நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவோர்களை எச்சரித்து காவல்துறையினர் 15 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் அறிவித்தனர். கள்ள நாட்டு துப்பாக்கிகளை தானாக முன் வந்து பொது இடத்தில் ஒப்படைக்க கோரி எச்சரிக்கை விடுத்தனர்.
அதை யாரும் பொருட்படுத்ததவில்லை என்பதால், கிருஷ்ணகிரி காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கிருத்திகா, தலைமையில் தனி படை அமைத்து ரோந்து சென்றனர்.
ரோந்தின் போது தனிப்டையினர் தீவிர சோதனை மேற்கொண்டு கள்ள நாட்டு துப்பாக்கிகளை கண்டுபிடித்தனர். தேன்கனிகோட்டை, தளி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உரிமம் இல்லா கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் செய்து , அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆய்வாளர் சரவணன், ராயகோட்டை ஆய்வாளர் சுப்பிரமணி. காவல் உதவி ஆய்வாளர்கள், பார்த்திபன்.சரவணன்.கார்த்திகேயன், நாகமணி மற்றும் காவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி கள்ளத்துப்பாக்கி உரிமையாளர்களை பிடித்தனர்.
இந்த தீவிர வேட்டையை தொடர்ந்து கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர்கள் அந்த ஊர்களில் உள்ள பொது இடங்களில் தாமாக முன் வந்து ஒப்படைத்து வருகிறார்கள். காவல் துறையின் இந்த நடவடிக்கையால் அந்தந்த ஊர் பொது மக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்தும், ஒத்துழைப்பும் அளித்தும் வருகிறார்கள். மேலும், இது போன்று கள்ளதனமாக துப்பாக்கி வைத்திருப்போர்கள் தானாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீதுநடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu