உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடக்கம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடக்கம்
X
மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இரண்டாவது ஜனநாயக நாடு அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் ஜனநாயகத்தை விட இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் சிறந்தது. தவிர அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை 4 மடங்கு பெரியது. எனவே இந்தியாவில் நடக்கும் தேர்தலை உலக நாடுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என வர்ணித்து வருகின்றன.

இந்தியாவில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். இந்தியா முழுவதும் 48 ஆயிரம் 3ம் பாலின வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர். இந்த வாக்காளர்களில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் மட்டும் 19.1 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 18வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட 1.8 கோடி பேர் முதன் முறையாக ஓட்டளிக்கின்றனர். தவிர 19.74 கோடி வாக்காளர்கள் 20 முதல் 29வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களாக உள்ளனர். 82 லட்சம் பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள். 2.18 லட்சம் பேர் நுாறு வயதிற்கும் மேற்பட்டவர்கள்.

இப்படிப்பட்ட தேர்தலில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கை மட்டும் பல கோடியை தாண்டும். இப்படிப்பட்ட ஒரு திருவிழா இந்தியாவை தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் நடைபெற வாய்ப்புகளே இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?