பாரதிய ஜனதா கட்சி 400 இடங்களை தாண்டுமா?

பாரதிய ஜனதா கட்சி 400 இடங்களை தாண்டுமா?
X
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களைத் தாண்டும் என்று யாரும் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களைத் தாண்டும் என்று யாரும் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது ஐ.என்.டி.ஐ என்று அழைக்கப்படும் கூட்டணி பரவலாக பிளவுபட்டுள்ளது, மேலும் நமது பிரதமர் மோடியின் தலைமையை பெரும்பான்மையான இந்தியர்கள் விரும்புகின்றனர். இதனால் இரண்டு முறைக்குப் பிறகும், பாஜக 400 இடங்களைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அத்தகைய எதிர்பார்ப்புக்கான சில முக்கியமான உண்மைகள் காரணங்களில் முதன்மையானது பிரதமர் மோடியின் தன்னலமற்ற சேவையினை குறிப்பிடலாம். கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி, தனது அமைச்சரவையில் உள்ள எந்த ஒரு அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் உருவாகாத அளவு சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார். 2014ல் பொறுப்பேற்றதில் இருந்தே, தேசத்திற்கு தன்னலமற்ற சேவை செய்து வருகிறார்.

தேசத்தின் பாதுகாப்பு : சமீபத்திய இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் வழங்கல், இதர நவீன உபகரணங்களை வழங்குதல், தேவையான உள்கட்டமைப்பு மேம்பாடுகளைச் செய்தல் என சிறப்பாக செயல்பட்டு பாதுகாப்புத்துறையை நல்ல முறையில் கட்டமைத்துள்ளார். புதிய 5ம் தலைமுறை மற்றும் 6ம் தலைமுறை போர் விமானங்களை வழங்குதல் போன்றவற்றின் மூலம் இராணுவப் படைகளை வலுப்படுத்தி உள்ளார். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு முதன்மையான முன்னுரிமை வழங்கி பிரதமர் மோடி கவனித்து வருகிறார்.

தேசத்தின் முன்னேற்றம்: இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு வியந்த பல உலக நாடுகள் தங்கள் வியூகத்தைமே மாற்றியுள்ளன. உலகின் ஐந்தாம் பொருளாதார வல்லரசு விரைவில் மூன்றாம் பொருளாதார வல்லரசாக மாறி விடும். அந்த அளவுக்கு நாட்டில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி உள்ளார். இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிர்வாகம் தொடர வேண்டும் என்றே பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கின்றனர். இதுவே பா.ஜ.க.,வின் நம்பிக்கைக்கு காரணம். ஆனால் இந்த கணிப்பு உண்மையாகும் என்று உறுதி கூற முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!