அதிமுக - பாஜக உறவு தொடருமா : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அதிமுகவை பொறுத்தவரைக் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுவருகிறது.இன்றைக்கு தலைமைக்கழகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளோடு பாஜக குழு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஏறக்குறைய 4.50 மணி நேரம் நடைபெற்றது.சுமூகமாக இந்த பேச்சுவார்த்தை இருந்தது.தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு.
கேள்வி. : எந்த எந்த இடம் குறித்துப் பேசப்பட்டதா...
பதில். ; பிரதான கட்சி கழகம் என்றபோது எந்த எந்த இடம் என்று தொடர்சியாக பேசப்பட்டு இறுதி முடிவுக்கு வரும்.
கேள்வி.; அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை அவர்கள் கேட்பதாக தகவல் வந்துள்ளதே.
பதில் ; வாய்ப்பு கேட்பது அவர்களின் கடமை.ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களின் முடிவு.அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம்.ஆனால் எங்களுக்கு என்று ஒரு முடிவு உள்ளதா இல்லையா.ஒத்துக்கொள்வது என்பது கட்சி நலனை பொறுத்து அமையும்.இவை அனைத்தையும் பார்த்துவிட்டு எங்கள் கட்சி நலன் பாதிக்காத வகையில் முடிவு இருக்கும்.
கேள்வி .: ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ் தாய் அவமதிக்கப்பட்டது குறித்து..
பதில் :பொதுவாக தாய்,தந்தை என்பது தெய்வத்திற்கு சமம்.அதேபோன்று தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒவ்வொருவரும் மரியாதை செலுத்தவேண்டிய நிகழ்வு.இது உணர்விலேயே இருக்கவேண்டும்.மரியாதை செய்யாத விஷயத்தை ரிசர்வ் வங்கி செய்தது என்பதை உண்மையிலே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.தமிழ்த்தாயை அவமதிப்பது என்பது ஒரு தாயை அவமதிப்பது போன்றதுதான்.இதுதான் கழகத்தின் நிலை.
கேள்வி :முரசொலியில் தமிழக ஆளுநர் குறித்து எழுதப்பட்டுள்ளதே...
பதில். :அவர்களை பொறுத்தவரையில் ஆட்சியில் இருக்கும்போது ஒன்று.ஆட்சியில் இல்லாதபோது ஒன்று.மாறி மாறி பேசும் இரட்டைநாக்கு.பச்சோந்திகள் எந்த இடத்திற்குச் செல்கிறதே இந்த இடத்திற்கு ஏற்றாற்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.அதுபோல ஆட்டுக்கு தாடி தேவையில்லை.நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்று சொன்னார்கள்.
பின்னர் கவர்னரை சார்ந்துள்ளார்கள்.இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்துவரவில்லை என்றால் கவர்னரை விமர்ச்சனம் செய்வார்கள்.15 வருடம் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்.இவர்கள் நினைத்திருந்தால் கவர்னர் தேவையில்லை என்று அன்றைக்கு இவர்கள் கொண்டுவந்திருக்கலாமே. இவர்களுக்கு ஒத்துஊதினால் கவர்னருக்கு புகழ்பாடுவார்கள்.இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்து ஊதவில்லை என்றால் அவரை விமர்ச்சனம் செய்வார்கள்.திமுக தலைவர் கருணாநிதி என்ன சொல்லியுள்ளார்.எங்கள் கட்சியினரே முரசொலியைப் படிப்பதில்லை என்றார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu