போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையை பாஜக ஏன் எடுக்கவில்லை?
போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம் (கோப்பு படம்)
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுத்தால், அந்த ஆதரவு மூலம் குறைந்தபட்சம் 15 லட்ச ஓட்டுக்களை பாஜக பெற முடியும். ஏன் அதை செய்யவில்லை என்பது நியாயமான கேள்வியாக இருந்தது.
ஆனால் அதை மேலோட்டமாக ஓட்டு அரசியலாக பார்த்தால், அதைத்தான் வழக்கம் போல திராவிட கட்சிகள் அரசியல் லாபம் கருதி செய்து வந்தன. அது எளிதில் தீர்க்க முடியாத பிரச்சினை என்று தெரிந்தும், தேர்தல் யூக வகுப்பாளர்களின் ஆலோசனையின்படி, திமுக கையில் எடுத்து, நிறைய வக்குறுதிகளை கொடுத்து விட்டது. இப்போது இருக்கும் நிலையில் சம்பளமே கொடுக்க முடியாத சூழலில், எப்படி அதைச் செய்ய முடியும்?
தலைவலிக்கு மருந்து தடவி, திருகுவலி வந்த கதைதான், இப்போதைய ஆட்சியாளர்களின் நிலையும். அதை பாஜகவும் கையில் எடுத்தால், நாளை அதை சமாளிக்கும் போது, திராவிட கட்சிகள், குறிப்பாக திமுக அதை பெரும் பிரச்சினைக்கு உள்ளாக்கும். அப்போது அது தவிர்க்க முடியாத பிரச்சினையில் முடியலாம் என்பதால் அதை பால் வார்க்கும் பாம்பாக, அணுக வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு நிர்வாகமும், நிலுவைத்தொகை என்ற Provident Fund என்பது சம்பளத்தின் ஒரு பகுதி, அதில் ஊழியர்களின் ஒரு பங்கு தொகையோடு சேர்த்து, அதற்கு இணையான தொகையை PF நிறுவனத்தில் செலுத்த வேண்டும். ஆனால் தமிழக அரசோ, மோசமான நிதி நிலைகள் காரணமாக, அரசு செலுத்த வேண்டிய தொகையை மட்டுமல்ல, தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்த தொகையையும் செலுத்தவில்லை.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அதன் தொகை மட்டும் 3000+ கோடி இருக்கும் என்கிறார்கள். அது மட்டமல்ல மேற்சொன்ன காலங்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இருந்ததால், அதன் தொகை தற்போது 10,000 கோடிக்கு மேல் இருக்கலாம்.
அது மட்டுமல்ல, பல வகைகளில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை இன்னும் சில ஆயிரம் கோடிகள் என்கிறார்கள். அதை எல்லாம் செலுத்தினால் 18000 கோடிக்கு மேல் வரும் என்று சொல்லப்படுகிறது. அவற்றை எந்த அரசாலும் இப்போது இருக்கும் சூழலில் செய்ய முடியாது.
இந்த சூழலில், கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 6000+ பஸ்கள் பணிமனையில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சரி, அங்கே தான் நிறைய பஸ்கள் இருக்கிறதே, அதை செப்பனிட்டு பயன்படுத்தலாம் என்பது இல்லாமல், மேலும் மேலும் அரசு, புதிய பஸ்களை வாங்கி, ஏற்கனவே இருக்கும் 48000 கோடி கடனை மேலும் அதிகரித்துள்ளது. எனவே அதன் நிதி நிலையை மிக மோசமாகி விட்டது.
ஒரு போக்குவரத்து ஊழியர் சொன்ன விஷயம் எப்படியெல்லாம் ஊழல் பெருக்கெடுத்து ஓடியது என்பதற்கான ஆரம்பம் என்றே சொல்லலாம். ஒரு பணிமனைக்கு பஸ்களுக்கு டயர்களை மொத்தமாக வாங்குவார்கள். அப்போது வருட இறுதியில் மீதம் இருக்கின்ற டயர்களை அடுத்த வருட கணக்கில் வரவு வைத்து பயன்படுத்த வேண்டுமல்லவா?
ஆனால் அதை செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலாக Exefessive Stocks என்று ஏலத்தில் அதை அடிமாட்டு விலைக்கு விற்பார்கள். அதை வாங்குகிறவர்கள் தான், அதே டயரை பாலிஸ் செய்து மீண்டும் புதிய டயர்களுடன் வரும். அந்த டயர்களைத் தான் முதலில் பயன்படுத்துவார்கள். அதன் எலாஸ்டிக் தன்மை குறைந்திருந்தாலும், அதை ஏற்க வேண்டியது நிர்வாகமே! ஆனால் அதில் ஒரு பெரிய தொகை கைமாறும்.
அடுத்து நிர்வாக ஊழல் முதல், தொழிலாளர் ஊழல் வரை ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஈரோட்டில் இருந்து பழனி செல்ல ஒரு அரசு பேருந்து 10:10 க்கு கிளம்ப வேண்டுமெனில், அடுத்த பஸ் தனியார் பஸ் என்றால், 5 நிமிடம் முன்னதாக எடுத்தால் கூட்டம் இங்கே குறையும், அடுத்த தனியார் பஸ்ஸுக்கு அதிகரிக்கும். அதனால் அந்த தனியார் பஸ் நிறுவனம் அரசு பஸ் ஊழியர்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள். அது ஒரு சிறு தொகை என்றாலும், நாள்தோறும் எனும்போது அது பெரிய தொகையல்லவா?
அது மட்டுமல்ல, சேலத்தில் இருந்து இரு பஸ் 9:45 க்கு ஈரோடு வந்து 10:20 க்கு எடுக்க வேண்டும். மேற்சொன்ன அதே சூழலில் அந்த பஸ் காலதாமதமாக வரும். அதனால் வந்தவுடன் அந்த ஸ்லாட் தனியார் பஸ்ஸின் ஸ்லாட் என்பதால் உடனே எடுப்பார்கள். அதனால் அரசு பஸ்ஸுக்கு வருமான இழப்பு என்பது ஊழியர்கள் சிலர் மூலம் செய்யும் ஊழலும் நடந்தது. மேலும் நேரடியாக காசு கொடுத்து அந்த அட்டவணையையே (Bus Schedule) மாற்றுவதும் ரெகுலராக நடக்கும் விஷயமே.
நேரம் தவறி வாகனங்களை இயக்கும் ஊழியர்களை தடுக்க டைம் கீப்பர்களை அதிகரித்து, அவர்கள் மூலம் இந்த பிரச்சினையை தடுக்க நினைத்தது. அதாவது ஊழியர்கள் நேர்மை இன்மையால், கூடுதல் பணியாளர் சுமை, கூடுதல் செலவு. இப்படி ஒவ்வொரு வகையிலும் செலவு. அதே சமயம் நேர்மையானவர்களே இல்லை என்று சொல்ல முடியாது? தனியார் பஸ் ஊழியர்களுடன் சண்டை போட்டு, அடிதடி செய்து மண்டையை உடைத்துக்கொண்ட நேர்மையான ஊழியர்களும் உண்டு.
இது ஒரு பெரிய பிரச்சினை ஆகி, தனியார் பஸ் கூட்ட நெரிசலுடன் போகும் போது, அரசு பஸ் பயணிகள் இல்லாமல் போகும். மேற்சொன்ன பிரச்சினையை நிர்வாக ரீதியில் எழுப்பினால், தனியார் பஸ்சில் பல வசதிகள் உள்ளன. நம்மிடம் இல்லை, அதனால் கூட்டம் வரவில்லை என்று அதற்கொரு குழு அமைத்து, அதை ரிப்போர்ட்டாக கொடுப்பார்கள்.
தனியார் பஸ் சீட்டுக்கள் தரமானதாகவும், ஆடியோ, வீடியோ என்பது எல்லாம் இருக்கும், இங்கே எதுவும் இருக்காது, இருந்தாலும் ஓடாது. அப்போ கூட்டம் எங்கே போகும்?
அதற்கு வசதிகளை கூட்ட ஒரு பெரிய டெண்டர், அதில் ஊழல், தரமற்ற பொருட்கள், இப்படி ஊழலிலேயே ஓடும் துறை அரசு போக்குவரத்து துறை. ஒரு புதிய பஸ் வந்தால், அந்த பஸ்ஸில் மேற்சொன்ன வசதிகள் எல்லாம் இருக்கும். அப்படி இருந்தால் மக்கள் விரும்புவார்கள், கூட்டம் கூடும் என்பதற்காக அதை அரசு ஊழியர்களை வைத்தே பழுதாக்குவார்கள். உதாரணமாக ஃபேன் எல்லாம் ஒரு காலத்தில் அரசு பஸ்ஸில் வந்தது, அது குறைந்த காலத்தில் தரமற்ற பொருட்களால் ரிப்பேர் ஆகிவிடும் அல்லது ஆக்கப்படும்.
மேலும் தேவையற்ற பல பதவிகள், அதற்கு லஞ்சம் என்று தலைவிரித்தாடியது போக்குவரத்து துறையில். ஒரு போஸ்டிங் எடுக்க வேண்டிய இடத்திற்கு மூன்று ஊழியர்கள் எடுத்து, அவர்களிடம் லட்ச லட்சமாக கொள்ளை அடித்தது ஒரு பக்கம், மறுபக்கம் எல்லா நிலைகளிலும் ஊழல்.
ஈரோடு- பழனி பஸ்ஸின் மாத கலக்ஷென் 10 லட்சமாக இருக்கிறது என்றால், தனியார் துறையில் அது 13-15 லட்சமாக இருக்கும். அதே கட்டணம், அதே பேருந்துகள், ஏன் வித்தியாசம்? ஊழல், ஊழல், ஊழல். ஒரு அரசு பஸ்ஸின் ஆயுட்காலம் 5 வருடம் கூட வருவதில்லை, ஆனால் தனியார் அதை 10 வருடத்திற்கு மேல் ஓட்ட எப்படி முடிகிறது?
இந்த சூழலில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழியர்கள் ஸ்ட்டிரைக். இதையெல்லாம் பொங்கல் போன்ற முக்கிய காலங்களில் மக்கள் ஊருக்குச் செல்லும் போது தான் அறிவிப்பார்கள். ஏனெனில் அப்போது தான் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும். மக்கள் கஷ்டப்பட்டால் அரசு ஏதாவது சலுகை காட்டும் என்பதால். ஆனால் போனஸும், சம்பள உயர்வும் தொடர்ந்து கேட்டு போராட்டம். செய்பவர்கள், எப்போதாவது மேற்சொன்ன ஊழல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி இருக்கிறதா? தேவைப்பட்டால் பேருக்கு சில பிரச்சினைகளை பக்கத்தில் சேர்த்து இருக்கும்.
அதுமட்டுமல்ல, இது போன்ற முக்கிய காலங்களில் அறிவித்தால், நீண்ட தூர பயணம் செல்லும் மக்கள், மாற்றாக ஆம்னி பஸ்களை நாட வேண்டும். அதனால் ரூ.1000 இருக்கும். கட்டணம் ரூ.1500 ஆகும். அதில் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதற்காக இந்த தொழில் சங்க தலைவர்களுக்கு, ஆம்னி பஸ் துட்டு கொடுப்பதும் கூட இப்போது நிகழ்கிறது.
இப்படி தொடர்ந்து எங்கும் ஊழல்கள் ஊழியர்கள் பொறுப்பின்மை என்று நடப்பதால், மக்கள் அரசு போக்குவரத்து துறை மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் பயணிக்கிறார்கள். இப்போது பெண்கள் இலவச பஸ் கட்டணம் எல்லாம், அரசு பஸ் நிறுவனத்தின் தலையில் தான் விழும். ஏற்கனவே 50000 கோடிக்கு மேல் இருக்கும் அந்த நிறுவனம் என்னவாகும்?ஆம், ஏர் இந்தியா போலவே, போக்குவரத்து ஊழியர்கள் என்பது அரசால் நடத்த முடியாத ஒரு துறை, அதை தனியார்கள் வசம் கொடுப்பதே நல்லது. ஆனால் அதை செய்ய அண்ணாமலை போன்ற தலைவர்கள் வந்தாலும், நிதி நெருக்கடி என்பது அவ்வளவு எளிதில் அனுமதிக்காது.
அப்படி இருக்கும் சூழலில் 15 லட்சம் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று அதற்கு அரசியல் ஆதரவு தந்து விட்டு, நாளை திமுக போல மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதால் பாஜக கொஞ்சம் விலகி நிற்கிறது. ஆனால் பாஜகவால் இதை படிப்படியாக சீராக்க முடியும் என்பது தொழிலாளர்களுக்கு தெரியாதா என்ன?
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் நேர்மையாக உழைத்து நிறுவனத்தை கடனில் இருந்து வெளியே கொண்டுவர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதையெல்லாம் புரிந்தும், புரியாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஆதரவு, நாளை பாஜக அரசுக்கு எதிராக முடியும். எனவே தான் இந்த ஜாக்கிரதை,உணர்வு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu