நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்ய நாராயணன் பதில்

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்ய நாராயணன் பதில்
X
திருவள்ளூர் அருேகே நியாயவிலை கடையை திறந்து வைத்த நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணன்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? என்ற கேள்விக்கு அவரது சகோதரர் சத்ய நாராயணன் பதில் அளித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து வாக்களிக்கவேண்டும். நடிகர் விஜயகாந்த் மறைவு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் ரஜினி ரசிகர் பாலாஜி என்பவர் தன் சொந்த செலவில் சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை ஒன்றை கட்டி முடித்துள்ளார். அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணன் கலந்து கொண்டு புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து குத்து விளக்கை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் சத்யநாராயணன் பேசினார். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு யாருக்கு என்ற செய்தியாளர் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார், ரசிகர்கள் வாக்களிப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்,மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் ,கட்சி பாகுபாடின்றி வாக்களிப்பார் என்றார்.

மேலும் நடிகர் விஜயகாந்த் மறைவு குறித்த கேள்விக்கு அவர் மறைவு மிகுந்த வேதனை தருவதாகவும், விஜயகாந்த் நல்ல மனிதர்,சாமானிய மக்களுக்கு உதவி செய்து உணவளித்தவர் என்றும், அவரது மறைவு தமிழக மக்களுக்கு பெரிய இழப்பாகும், அவருக்கு மணிமண்டபம் கட்ட ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன், துணைத் தலைவர் பாக்கியலக்ஷ்மி ரமேஷ்,ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருணாகரன் வெங்கட், முனிவேல் , காசிராஜன்,அன்பு செழியன்,பாஸ்கர் கோபி,ரவி, வாட் உறுப்பினர் வைஷாலி பாலாஜி,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!