யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்?

யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்?
X

பிரஃபுல் கோடா பட்டேல் (கோப்பு படம்)

லட்சத்தீவுக்கு நிர்வாக அதிகாரியாகப் போட்ட ஆறு மாசத்திற்குள் சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து எல்லாம் எதிர்ப்பு வருகிறதே?

நிர்வாகத் திறமையில் அமித்ஷாவோ இல்லையோ தெரியாது. ஆனால், மோடிஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையில் அவர் அமித்ஷாவுக்கு இணையானவர் தான். 2010ல் அமித்ஷா சிறைக்குச் சென்ற பொழுது குஜராத்தின் உள்துறை அமைச்சராக பிரஃபுல் பட்டேல் தான் இருந்தார். பிரஃபுல் பட்டேலின் அப்பா கோடா படேல் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர். மோடி ஆட்சியில் இருக்கும் போதே கூட அடிக்கடி அவரைச் சென்று சந்தித்து வரும் அளவுக்கு பெருமதிப்பிற்குரிய சங்கக் காரியாகர்த்தா .

யூனியன் பிரதேசத்திற்கு நிர்வாக அதிகாரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற இந்தியா நிர்வாகப் பணியாளர்களை மட்டுமே நியமிக்கும். வழக்கத்திலிருந்து மாறாக ஓர் அரசியல்வாதியை நியமித்தார் மோதி. அவ்வளவு மெனக்கெட்டு இவரை பதவியில் வைக்கும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்.

ஆம், இப்பவும் டையூ டாமன் யூனியன் பிரதேசத்திற்கு நிர்வாக அதிகாரி தான். அங்கே, போதைப் பொருட்கள், மதுபான மாஃபியா அரசியலை எல்லாம் எப்படி ஒழித்துக் காட்டினார் என்பது தனிக் கதை. எப்படின்னா ரொம்ப சைலன்ட் கில்லர். இறுதி இலக்கு என்னவோ அதை நோக்கி மட்டும் வேலை செய்பவர். அப்படியானவர் வந்தால் களவானிப் பயலுகளுக்கு கடுப்பா இருக்குமா இருக்காதா?

ஒண்ணும் பெருசா எதுவும் செய்யவில்லை. கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினார். அங்குள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த சில திட்டங்கள் தொடங்கினார். தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்தால் திருடர்களுக்கு கோபம் வருமா வராதா? அதுவும் இந்தத் திருடர்கள் அதிக ருசி கண்ட அதீத அரசியல் பின்னணி கொண்ட மகா திருடர்கள்.

லட்சத்தீவுக்கு நேரடி சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இந்தத் திருடர்களுக்காக ஒரு தீர்மானமே நிறைவேற்றுகிறார்கள் என்றால், பணப்புழக்கம் எந்தளவு இருந்திருக்கும் என்று யோசியுங்கள். அதிகார பலம் எவ்வளவு இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அதுவாவது பரவாயில்லை. ஏதோ மீனவர்கள் தொடர்பாக இருக்கிறது என்று சப்பை சமாதானம் செய்து கொள்ளலாம். எந்தச் சம்பந்தமும் இல்லாத இடத்தில் இருந்து கூட எதிர்ப்பு கிளம்புகிறது.

ஒரேயொரு அதிகாரி. ஆறு மாதம் கூட பதவியில் இல்லாத ஒருவரை நீக்கச் சொல்லி இரண்டு பெரிய வி.ஐ.பி.,க்களை பேசச் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் இரண்டு விஷயத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

1. அவ்வளவு பணப்புழக்கம் உள்ள பெரிய மாஃபியா நெட்வொர்க் இருக்கிறது.

2. ஆறு மாசத்தில் அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை கதற விடும் அளவிற்கு பிரஃபுல் பட்டேல் ஏதோ செய்திருக்கிறார்.

மோடியை பொருத்தவரை நடந்தவற்றிற்கு நீதி கிடைப்பதை விட நடக்கவிருக்கும் நிகழ்வுகளில் எந்தத் தவறும் இருக்கக் கூடாது என்பதில் அதீத கவனமும் அர்ப்பணிப்புடனும் செயல்படுகிறார்கள். அதுவும், முழுவதும் சட்டத்திற்கு உட்பட்டு சிறிய வன்முறை கூட இல்லாமல்.

மோடிஜி டீம், தேசத்தின் எல்லைகளில் தான் முதல் கவனம் கொடுத்தார்கள். அப்படித்தான் நடந்த சம்பவங்களும் சொல்கின்றன. மோடிஜி டீம் முழு கவனம் கொடுத்த மூன்று எல்லைகள்,

1, வடகிழக்கு மாநிலங்கள். வன்முறைகளும் வறுமையையும் தவிர வேறு எதையும் பார்க்காத மாநிலங்கள் இப்போது சதவீத அடிப்படையில் ஜிஎஸ்டி அதிகமாக கட்டும் மாநிலங்களாக , தேசிய அக்கறை கொண்ட மாநிலங்களாக உயர்ந்துள்ளன. (இது நேற்று)

2, காஷ்மீர். ஒரு துளி ரத்தமில்லை. பிற நாடுகளிடமிருந்து ஒரு டெஸிபல் சத்தமில்லை. இன்றைக்கு பல முன்னணி நிறுவனங்கள் அங்கே தொழில் தொடங்கக் கிளம்பியுள்ளது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு இப்பொழுது இயல்பான வாழ்க்கைக்கு மீண்டிருக்கிறார்கள். ( இது இன்று)

3, லட்சத் தீவுகள். தேசத்தைப் பொருளாதார ரீதியாகக் கெடுத்துக் கொண்டிருந்த எல்லைப்பகுதி. அதே எல்லைப் பகுதியை உலக சுற்றுலாத் தளமாக்கி தேசத்தின் வருமானத்தைப் பெருகச் செய்யப் போகிறார்கள். ( இது நாளை)

மோதிஜியின் டீம், "சொல்லி அடிக்கும் கூட்டம் அல்ல"

"அடிச்சுட்டும் சொல்லாமல் போற கூட்டம்".

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!