பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதி எது?

பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதி எது?
X

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா

பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் எங்கு போட்டியிடுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் உத்தரபிரதேசத்துக்கு செல்ல விரும்பாத அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டி உள்ளார்.

சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.

அதற்கு பதில் அவர் நாடாளுமன்ற மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்.பி.யாக தேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

முன்னதாக பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி உயிரிழந்த அந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அவரை தமிழகத்துக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் போட்டியிடுவதால் பிரியங்காவும் தென் இந்தியாவுக்கு வர சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

ராகுல், பிரியங்கா தென் இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!