சந்திரபாபுநாயுடு பதவியேற்பு தள்ளிப்போக காரணம் என்ன?

சந்திரபாபுநாயுடு பதவியேற்பு தள்ளிப்போக காரணம் என்ன?
X
பிரதமர் மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை 9ம் தேதி பதவியேற்க உள்ளதால், சந்திரபாபுநாயுடு வரும் 12ம் தேதி புதன்கிழமை பதவியேற்கிறார்.

மத்தியில் பா.ஜ.க., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை 9ம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135-ல் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார். அவர் வருகிற 8-ம் தேதி அமராவதியில் முதல்-மந்திரியாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி பதவியேற்கும் நிலையில், இந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்கிறார். இதற்காகவே சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வருகிற 12-ம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

இவ்வளவு பெரிய வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதற்கு பதில் இன்று சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் இருக்கிறது. தனது பேட்டியில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எனது நன்றிகள்” எனக் கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

அவர் கூறியது போலவே, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உதவியது என்டிஏ கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) மீண்டும் இணைத்தது. ஆனால், அத்தனை எளிதாக பாஜக தெலுங்கு தேசத்தை கூட்டணியில் இணைக்கவில்லை. சொல்லப்போனால், ஜெகன் மோகன் தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்லவே பாஜக அதிகம் விரும்பியது.

ஏனென்றால், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பாஜக - தெலுங்கு தேசம் இடையே உரசல்கள் ஏற்பட்டன. என்டிஏவில் இருந்த போதும், முதல்வராக பதவி வகித்த போதும் பாஜகவால் உதாசீனப்படுத்தப்பட்டார் சந்திரபாபு. 2017-ல் முதல்வராக இருந்த அவர் பலமுறை மோடியை சந்திக்க முயன்றும், அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்காமல் தவிர்த்தது பிரதமர் அலுவலகம். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் சந்திரபாபுவை சந்திப்பதை தவிர்த்தார் மோடி. இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியை உதறினார் சந்திரபாபு நாயுடு.

இதன்பின் ஜெகன் ஆட்சிக்கு வர, காட்சிகள் மாறியது. பகை அரசியலால் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்தார். சட்டசபையில் குடும்பத்தை இழிவுபடுத்தியதில் தொடங்கி, அவரின் பிரஜா வேதிகா வீடு இடிப்பு, இறுதியில் ஊழல் வழக்கில் கைது என ஜெகன் ஆட்சியில் தனி மரமாக ஆக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு.

Tags

Next Story
இந்த குளிர் காலத்துல, இந்த விதமான உணவுகளை எல்லாம்  சொல்றமாரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க....