பிரதமர் மோடியின் தாயார் விட்டுச் சென்றது என்ன?
தேனி தொகுதி பா.ஜ.க.,கூட்டணி வேட்பாளர் டி.டி.வி., தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க., மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,
தேனி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர் டி.டி.வி., தினகரனை, மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., தலைமையில் அக்கட்சி பிரமுகர்கள் சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பா.ஜ.க.,வினர் கூறியதாவது:
இந்தியா என்ற உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசு நாட்டிற்கு 10 ஆண்டு பிரதமராக இருந்தவர் மோடி. அதற்கு முன்னர் 13 ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்கு முதல்வராக இருந்துள்ளார். அவரின் தாயார் இறந்த பின்னர் அவரது வீட்டில் என்னென்ன இருந்தது தெரியுமா?
ஒரு இட்லிக் குண்டான், நாலு பிளாஸ்டிக் பக்கெட், ரெண்டு தட்டு தம்ளர், கொஞ்சம் தட்டு முட்டு சாமான் மட்டுமே இருந்தது. இதுல கூட எதையும் போகும் போது அவர் கொண்டு போகல. அவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இவரது மகன் 13 வருடங்கள் முதல்வர், 10 வருடங்களாகப் பிரதமர், இவர் நினைத்திருந்தால் டெல்லி பிரதமர் இல்லத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், ஒரு கர்மயோகியின் தாய் எப்படியிருப்பார்?, டெல்லி செங்கோட்டையில் இதுவரை 9 முறை தேசியக்கொடியை ஏற்றியிருக்கிறார் மகன். ஆனால் ஒருமுறை கூட இந்தத் தாய் அதை நேரில் கண்டுகளித்ததில்லை.
மோடியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும் குடும்பத்தினரை அரசியல் அதிகாரத்திற்குள் விட்டதில்லை. இருவருக்கும் சொந்தமாக வீடு கூடக் கிடையாது. மோடியின் சகோதரர் இன்றும் மளிகைக்கடை நடத்தி வருகிறார். யோகியின் சகோதரி இன்றும் பூக்கட்டி வியாபாரம் செய்து வருகிறார்.
கொஞ்சம் அப்படியே திரும்பித் தமிழ்நாட்டைப் பார்ப்போம். அதிகாரப்பூர்வமாக தமிழகத்தின் முதல் பணக்காரர் கலாநிதிமாறன். இவர் மட்டும் 45 TV சேனல்கள் நடத்தி வருகிறார். இவை கணக்கில் காட்டப்பட்ட சொத்து மதிப்பை மட்டும் வைத்து, இவர் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் மற்றும் பினாமிகளின் சொத்துக்களைக் கணக்கிட்டால் நிச்சயமாக உலகின் முதல் பணக்காரக் குடும்பமாக இவர்கள் தான் இருப்பார்கள்.
பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து இரண்டு IPL அணிகளை வாங்கி வைத்து தினமும் கிரிக்கெட் பார்த்து மகிழ்கிறார்கள். கருணாநிதியின் குடும்பத்தில் அடுத்து நூறுவருடங்கள் கழித்துப் பிறக்கப்போகும் குழந்தைகூட பல ஆயிரம் கோடி சொத்துக்களின் அதிபதியாகப் பிறக்கும். இவர்கள் மட்டுமா இப்படி. சென்ற தேர்தலில் ஜெயித்த திமுக கவுன்சிலர் கூட இந்நேரம் சில லட்சங்களைச் சம்பாதித்தித்துள்ளனர். பரம்பரையாக அரசியல் தொழில் செய்யும் அமைச்சர்களைப் பாருங்கள். ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான கோடிகளை பினாமிகள் பெயரில் வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள்.
தமிழகத்தின் முக்கியமான கல்விநிலையங்கள், தொழிற்சாலைகள், சாராய ஆலைகள் அத்தனையும் இவர்களுடையதே. லாரி டிரைவராக இருந்த ஒரு MP-க்கு இன்று சொந்தமாக பல கப்பல்கள் இருக்கின்றன. முன்னாள் சாராய வியாபாரியான ஒரு அமைச்சர் இன்று கல்வித்தந்தை. இவையெல்லாம், தமிழகமக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இருப்பினும் மாற்றாக இருந்த அ.தி.மு.க.,விலும் இதே ஊழல் கூத்து தான் நடக்கிறது. தமிழகத்தில் இதுவரை சுத்தமான ஊழல் இல்லாத ஆட்சி தர வேறு எந்த கட்சியினரும் இல்லாததாலும், மக்களுக்கு வேறு வழியில்லாத நிலை காணப்பட்டது. இப்போது தமிழக மக்கள் எதிர்பார்த்ததை போன்றே பா.ஜ.க., மத்தியில் ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை வழங்கி தனது ஆளுமையினை நிரூபித்து விட்டது.
அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க., தமிழகத்தில் வலுவாக காலுான்றி விட்டது. இதனால் இம்முறை ஊழலில் திளைத்தவர்களை விரட்ட மக்கள் முடிவு செய்து விட்டனர். பா.ஜ.க., பக்கம் மக்கள் சாய்ந்து விட்டனர். இந்த முறை நாங்கள் சென்ற இடமெல்லாம், சிறப்பான வரவேற்பு கிடைத்ததை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். தமிழகத்தில் பா.ஜ.க., கூட்டணி வலுவான வெற்றியை பெறும். தேனி தொகுதியில் டி.டி.வி., தினகரன் அபரிமிதமான வெற்றியை ஈட்டுவார். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu