லோக்சபா சீட்... அமைச்சர் பதவி? லட்டு மாதிரி பாஜக தந்த ஆபர்..!
பாஜகவில் இணைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் காங்கிரசில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி. ஆனால் இவர் மட்டுமின்றி இன்னும் சிலர் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரணி முயன்று உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்எல்ஏ விஜய் வசந்த் தொகுதியில் போட்டியிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல இவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் பாஜகவில் இணைந்து விட்டார் என்கிறார்கள். இதனால் பாஜகவில் இவருக்கு தென் மண்டலத்தில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படலாம். பா.ஜ.க., வெற்றி பெற்றால் விஜயதாரணிக்கு அமைச்சராகும் யோகம் கூட கூடி வரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆபர் கொடுத்த பா.ஜ.க., விஜயதாரணியை தனது கட்சியில் சேர்த்துள்ளது என்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu