கணக்கை தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம்! இதுவரை 3 இடங்களில் வெற்றி

கணக்கை தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம்!  இதுவரை 3 இடங்களில் வெற்றி
X

விஜய் 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர், இதுவரை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரபூர்மற்ற முறையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் போட்டியிட்டு, கணிசமான வெற்றியை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த தேர்தலில் முதன் முதலில், விஜய் மக்கள் இயக்கம், அதிகாரபூர்வமாக போட்டியிட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 3 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!