ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு சீமானுக்கு வீரலட்சுமி அனுப்பிய நோட்டீசு

சீமான், வீரலட்சுமி
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் தவறும் பட்சத்தில் இரண்டு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தின் சார்பில் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் இரண்டு லட்சுமிகளால் சர்ச்சைக்கு ஆளானார். இதில் ஒரு லட்சுமியான நடிகை விஜயலட்சுமி தனது புகாரை திடீர் என வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டு பெங்களூருவிற்கு பறந்தார்.
இன்னொரு பெண்ணான வீரலட்சுமி, சீமான் தன்னை வன்னியர் இல்லை என்றும் நாயுடு என்றும் மேலும் சென்னை பெருநகர் காவல் நிலைய அலுவலகத்தில் வருகை தரும் போதே செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தெரிவித்ததாகவும் மேலும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உட்பட தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியை பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி மன உளைச்சலுக்குள்ளாக்கி உடல் ரீதியாக பாதிப்படைந்த காரணத்தாலும், மேலும் தன்னுடைய சாதியின் அடிப்படையில் பேரிழப்பு ஏற்படுத்தியதாகவும்,
மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த போதும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து தனக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அச்சுறுத்தும் விதமாகவும் ஆபாசமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
இதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் சார்பிலும் கட்சியின் தொண்டர்கள் சார்பிலும் வீரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu