அண்ணனுடன் கைகோர்க்கிறாரா வருண்காந்தி?

அண்ணனுடன் கைகோர்க்கிறாரா  வருண்காந்தி?
X

வருண் காந்தி(கோப்பு படம்)


பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திரா காந்தியின் இளைய மகனான மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவரது மகன் வருண் காந்தி. இவர்கள் வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜகவில் உள்ளனா். பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பதவியையும் வருண் காந்தி முன்பு வகித்துள்ளார். இந்நிலையில், தொடா்ந்து மூன்று முறை பாஜக எம்.பி.யாக இருந்த வருண் காந்திக்கு இந்த முறை அக்கட்சித் தலைமை தொகுதி ஒதுக்கவில்லை.

அண்மைக் காலமாக அவா் பாஜக மத்திய தலைமையை விமா்சித்து வந்தார். கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அமேதியில் சஞ்சய் காந்தி மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உத்தர பிரதேச பாஜக அரசையும் அவா் விமா்சித்தார். மேலும், கடந்த ஆண்டு கேதார்நாத்தில் காங்கிரஸ் எம்.பி.யும் தனது அண்ணனுமான (பெரியப்பா மகன்) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவா் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் ராகுல்காந்திக்கும், வருண்காந்திக்கும் இடையே மீண்டும் குடும்ப நட்பு துளிர்த்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளால் பாஜக தலைமைக்கு வருண் காந்தி மீது ஏற்பட்ட அதிருப்தியே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. வருண்காந்திக்கு பா.ஜ.க.,வில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அண்ணனிடம் இருந்து அதாவது காங்., கட்சியிடம் இருந்து வருண் காந்திக்கு அழைப்பு வந்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா