நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து போட்டி
சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் டி.டி வி. தினகரன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியது:
நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடை பெற்று விட்டதாகவும் முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.
ஒமிக்ரான் பரவல் நேரத்தில் ஆளுங்கட்சி ஆனது தேர்தலை நடத்துகிறது. ஒமிகிறான் பரவல் தேர்தல் காரணமாக அதிகரிக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது. நோய்த்தொற்று காலத்தில் தேர்தலை நடத்துவது ஆளுங்கட்சியின் இயலாமை என்றார்.
ஆறு மாதம் கழித்து இப்போதுதான் தெரிகிறது திமுகவின் உண்மை முகம். அதற்கு பொங்கல் தொகுப்பு உதாரணமாக அமையும்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். தோல்வி அடைந்தால் வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம். அரசியல் வியாபாரம் இல்லை.
அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சரியானது. பேசிய வார்த்தைகள் தவறானது என்றார். அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் அதை குழந்தையை கேட்டாலும் சொல்லும். அதைதான் நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ளார்.
ஆளுங்கட்சியின் முறையகேடுகளை மீறி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம் என்று கூறினார். அரியலூர் மாணவி விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களை பயன்படுத்தியது சட்டப்படி தவறு எனில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கலாம்.
கவிஞர் வைரமுத்துவின் கவிதை "பட்டு வேட்டிகாக கனவு கண்டிருந்த போது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது" என்பது திமுகவின் ஆட்சிக்கு பொருந்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu