திமுகவில் ஐக்கியமாகும் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

திமுகவில் ஐக்கியமாகும் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
X

 முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்.

மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்கவில்லை. எனினும் அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார். இதனிடையே மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம் தலைமையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 300 பேருடன் நாளை காலை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தோப்பு வெங்கடாசலம் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர முயன்று வந்த நிலையில் நாளை இணையவிருக்கிறார். முன்னதாக அதிமுகவிலிருந்து தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்