தொண்டர்கள் உழைப்பில் பிழைக்கும் கருணாநிதி குடும்பம்: தமிழிசை சவுந்தர்ராஜன்

தொண்டர்கள் உழைப்பில் பிழைக்கும் கருணாநிதி குடும்பம்: தமிழிசை சவுந்தர்ராஜன்
X

தமிழிசை சவுந்தர்ராஜன்.

தொண்டர்கள் உழைப்பில் பிழைக்கும் கருணாநிதி குடும்பம் என தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது மக்களின் நேரத்தையும் வரிப்பணத்தையும் சேமிக்கும் என்றும் கூறினார்.

அரசு திட்டங்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டி, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருமாவளவனின் கூட்டணி மாநாடு குறித்த குழப்பம் இருப்பதாகவும், உள்ளூர் தொழிற்சாலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பற்றியும் கவலை தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தி.மு.க.வின் பவள விழாவை "முடிசூட்டு விழாவின் துவக்கம்" என விமர்சித்து, அக்கட்சியின் "வாரிசு அரசியலை" கண்டித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ஒரே நாடு; ஒரு தேர்தல் மாபெரும் முயற்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், மக்களின் சிரமும், நேரமும் மிச்சமாகிறது. தேர்தல் கமிஷனின் செலவும், மக்கள் வரிப்பணமும் மிச்சமாகும். அரசியல் கட்சிகளின் செலவுகளும் குறையும்.

வேலை நிறுத்தம்

உள்ளூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்; அதைத் தீர்க்க முடியவில்லை. ஆனால், தமிழக முதல்வர், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு திரட்டி வருகிறார். இப்படித்தான் எல்லாமே வேடிக்கையா நடந்துகிட்டு இருக்கு.

அமைச்சர் மகேஷ் தொகுதியிலேயே பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள், வெளி கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்தது போல், இதிலும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன், கூட்டணியில் ஏதோ ஒரு பிரச்னைக்காக மாநாடு நடத்துகிறார். கூட்டணியை விரிவுபடுத்தவா, விரிசல் படுத்தவா என்று புரியவில்லை.

நல்ல நாள்

உதயநிதியை துணை முதல்வராக்குவதற்கு, முகூர்த்த நாள் தேடிக் கொண்டிருக்கின்றனர். நல்ல நாள் முடிவு செய்யப்பட்டதும், துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் பகுத்தறிவுவாதிகள்.

பவள விழா, தொண்டர்களுக்காக நடத்தப்பட்டதல்ல, முடிசூட்டு விழாவின் துவக்கம். இதுதான் வாரிசு அரசியல். தி.மு.க.,தொண்டர்கள், உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும், கருணாநிதியின் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பதிவில் இங்கு முதல்வர் குடும்பம் வாழ்வதற்காக கட்சி தொண்டர்கள் உழைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அரசுக்கும் அரசியலுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு குடும்ப திருமணத்திற்காக வும் ஆடம்பரத்திற்காகவும் ஒரு கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்ல அரசு மட்டும் அல்ல ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் வரி கொடுத்து வாழ்க்கை கொடுக்கிறார்கள் அது சரியா. அம்மா இவ்வளவு ஆவேசமாக யாருக்காக பேசுராங்களோ அவங்க கிட்ட இருந்து இவங்களுக்கு திருமண அழைப்பிதழ் வந்ததா சென்றபோது என்ன மரியாதை கொடுத்தார்கள். போட்டிகளில் நிற்காத நிர்மலா சீதாராமன் அம்மையாருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் அமைச்சர் அதுவும் மிக வலிமை நிறைந்த பொருப்பு ஆனால் தாங்கள் இவ்வளவு உண்மையாக கூச்சலிட்டும் ஆரியர்களுக்கு கொடுக்க முடிந்த பதவியை ஏன் திராவிடர்களாகிய உங்களுக்கு கொடுக்க முடியவில்லை. சிந்தியுங்கள். நான் அரசியலையும் அரசியல்வாதியையும் எதிர்ப்பவன் தான். ஆனால் இது போன்று சிந்திக்காமல் பேசும் போது விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!