அதிமுக தேவையே இல்லை..!டோஸ் விட்ட ராகுல்காந்தி...!

அதிமுக தேவையே இல்லை..!டோஸ் விட்ட ராகுல்காந்தி...!
X
அதிமுக கட்சிக்கான கூட்டணி கதவை காங்கிரஸ் மொத்தமாக இழுத்து மூடிவிட்டதாம்.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் முக்கியமான சில தகவல்களை வெளியிட்டுள்ளன.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் கூட்டணி குறித்த விவாதங்கள் நடக்க தொடங்கி விட்டன. இந்த முறை கூட்டணி பார்முலாக்கள் மாறுமா.. இல்லை அதே கூட்டணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு அடிபோட்டு வருகிறார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக தற்போது காங்கிரஸ் பக்கம் செல்வதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.

அதிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நடக்கும் பிரச்சனைகளை, கூட்டணி பேர இழுபறிகளை பயன்படுத்தி எப்படியாவது கூட்டணியை உடைக்கலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறாராம். சில மாஜிக்கள் கூட இதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார்களாம்.

அந்த வகையில் அதிமுகவிடம் அரசியல் ஆலோசகராக இருந்த நபர்தான் இதற்கான பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறாராம். இவர்தான் தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த முயற்சிகளை செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருக்கிறார். இந்த நபர் காங்கிரசில் முக்கிய பதவியும் பெற்றுள்ளார்.

திமுகவிற்கு இவர் பணிகளை செய்து இருந்தாலும்.. இவருக்கும் திமுகவிற்கு இப்போது ஏழாம் பொருத்தம் என்கிறார்கள். இவர்மூலம்தான் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைய போவதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவித்தன.

மெகா கூட்டணி: பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும். சிறுபான்மையினர் வாக்கு வங்கி சரியும் என்றுதான் எடப்பாடி கூட்டணியை முறித்தார். இந்த நிலையில்தான் காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி அந்த அரசியல் ஆலோசகர் மூலமாக முயன்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. பாஜகவுடன் இப்போது அதிகாரபூர்வமாக அதிமுக கூட்டணியில் இல்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உருவாக்காமல் உறவை முறிக்க முடிவு எடுத்து விட்டனர்.

அதோடு தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக இல்லாமல் எடப்பாடி மெகா கூட்டணி அமைக்கிறார் என்றால் கண்டிப்பாக காங்கிரஸ் தேவை. தேசிய கட்சி இல்லாமல் லோக்சபா தேர்தலை சந்திப்பது பெரிய அளவில் பின்விளைவுகளை தரும். அப்படி இருக்கத்தான் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்தது.

மூடிய கதவு: ஆனால் அதிமுக கட்சிக்கான கூட்டணி கதவை காங்கிரஸ் மொத்தமாக இழுத்து மூடிவிட்டதாம். இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் முக்கியமான சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சியில் அதிமுக கூட்டணிக்காக உள்ளடி வேலைகளை பார்த்த அந்த வியூக வகுப்பாளரை அழைத்து ராகுல் டோஸ் விட்டு இருக்கிறாராம்.

இது போக சிலரை வைத்து அதிமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி சர்வே எடுத்துள்ளாராம். அந்த கூட்டணி வேலைக்கு ஆகாது என்று சர்வே ரிப்போர்ட் வந்த காரணத்தால்.. ராகுல் இந்த கூட்டணி மாறும் கதையே வேண்டாம். திமுக நம்மிடம் நட்பாக உள்ளது.. இந்தியா கூட்டணி உருவாகவே அவர்கள் தான் காரணம். அவர்களை எல்லாம் பகைக்க வேண்டாம் என்று அடித்து கூறிவிட்டாராம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!