ஜெயலலிதா பாணியில் அடித்து ஆடுகிறார் ஸ்டாலின்!

ஜெயலலிதா பாணியில் அடித்து ஆடுகிறார் ஸ்டாலின்!
X
பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் ஜெயலலிதா செய்யும் முக்கியமான செயல் ஒன்று அக்கட்சியில் மிஸ்ஸாகி வருகிறது.

மாறாக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில வருடங்களே சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார். என்ன நடந்தது? லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணி எதையும் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக பெரும்பாலும் கூட்டணியை இறுதி செய்து விட்டது. பழைய கூட்டணியே இந்த முறை இந்தியா கூட்டணி என்ற பெயரில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மற்ற கட்சிகளுக்கு 1 அல்லது 2 இடங்களை மட்டுமே கொடுக்கலாம் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் திமுக முதல் ஆளாக தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட தொடங்கி உள்ளது. பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் ஜெயலலிதா செய்யும் முக்கியமான செயல் ஒன்று அக்கட்சியில் மிஸ்ஸாகி வருகிறது.

நீங்க எல்லாம் பொறுமையா பேச்சுவார்த்தை நடத்துங்க.. நாங்க துரிதமா முடிவு எடுத்துட்டோம் என்று சொல்லும் அளவிற்கு திமுக தமிழக தேர்தல் களத்தில் வேகம் காட்டுவார். இப்போது உள்ள அதிமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை கூட முடிக்கவில்லை.

பொதுவாக தேர்தல் நேரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பார். மற்ற கட்சிகள் ஆலோசனையை தொடங்கும் முன்பே ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பார்.

இப்படி செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் ஏற்படும். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் துரிதமாக பணிகளை தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பிக்க வசதியாக இருக்கும். நாங்கள் தேர்தலுக்கு ரெடி என்று சொல்லக்கூடிய சைக்கலாஜிக்கல் யுக்தி இது. இதைத்தான் தற்போது ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் எடப்பாடி இதை மிஸ் செய்துவிட்டார்.

கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் சென்றாலும் இன்னொரு பக்கம் முதல் கட்டமாக சீட் ஒதுக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலை திமுகவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அழுத்தம் தற்போது அதிமுகவிற்கு ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!