"நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டுமே பார்த்துள்ளது”: பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி (கோப்பு படம்)
‘‘2024 மக்களவைத் தேர்தல் வெறும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கானது இல்லை. மாறாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது" என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மீரட்டில் இருந்து தொடங்கி வைத்தார். மக்களவையில் அதிக இடங்களைக் கொண்ட மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மீரட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும் போது, ‘நாடு கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சியின் டிரெய்லரை மட்டும் பார்த்துள்ளது. உண்மையான வளர்ச்சி இனிமேல் தான் தொடங்க உள்ளது. இனி வரும் ஆட்சியில் தான் நாட்டின் வளர்ச்சித்திட்டங்கள் முழு வீச்சில் செயலுக்கு வரும்.
வரும் 2047ம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்பதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளது. இந்த தேர்தல் மூலம் வளர்ந்த இந்தியாவை மக்கள் உருவாக்க வாய்ப்பளிப்பார்கள். இவ்வாறு பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லி பிரசாரத்தில் பதிலளித்தார். அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தல் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும்.
பா.ஜ.க., கடுமையான முடிவுகளை எதிர்க்கட்சிகள் மீது திணிக்கிறது. காங்., நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும். பா.ஜ.க., தனது செல்வாக்கினை உயர்த்திக் கொள்ளவே இந்த தேர்தலை பயன்படுத்துகிறது. இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu