/* */

சைலன்ட் தமிழ்நாடு பாஜக, 'மூச்சு' விட மறுக்கும் அதிமுக. என்ன நடக்குது?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

HIGHLIGHTS

சைலன்ட் தமிழ்நாடு பாஜக, மூச்சு விட மறுக்கும் அதிமுக. என்ன நடக்குது?
X

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தபின், அதிமுக, பாஜகஎன இருதரப்பு தலைவர்கள் கனத்த மவுனமாக இருப்பதால் 'கூட்டணி முறிவு' என்பது அரசியல் நாடகமா? என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கடுமையாக விமர்சனங்களால் அதிமுக தலைவர்கள் கொந்தளித்தனர். முதலில் ஜெயலலிதா, பின்னர் பேரறிஞர் அண்ணாவை விமர்சித்தார் அண்ணாமலை. இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி தரப்பட்டது.

இருப்பினும் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்தது. இந்நிலையில் செப்டம்பர் 18ம் தேதி, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பிறகு சமாதானமாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகும் அண்ணாமலை தரப்பு உக்கிரமாக இருந்தது. இதனால் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டது.

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது.

இதனை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதேபோல மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேநேரத்தில் இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிந்த பின்னர் கூட காரசாரமான கருத்துகளை தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு முக்கிய கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார். தமிழ்நாடு பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி, அதிமுகவுக்கு எதிராக பதிவிட்டிருந்த பதிவை கூட நீக்கிவிட்டார். டெல்லி பாஜக தலைவர்களும் கூட பட்டும் படாமலுமே பதில் சொல்லி வருகின்றனர்.

அதேபோல சென்னை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் அதிமுக தரப்பிலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து எந்த தலைவரும் பேசவில்லை. இது தொடர்பாக பேசவும் மறுத்து வருகின்றனர்.

இதனால் அதிமுக -பாஜக கூட்டணி முறிவு என்பது அப்பட்டமான ஒரு நாடகமாக இருக்கலாமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் அதிமுகவுக்கு தோல்வி தான் என்பதை உணர்ந்து கொண்டு இப்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்களோ என்கிற கேள்வியையும் சில தலைவர்கள் எழுப்பி உள்ளனர்.

இன்னொரு பக்கம், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதால் திமுக தலைமையிலான வலிமையான கூட்டணியை உடைத்து அதன் வெற்றி வாய்ப்பை சிதைக்கக் கூடிய வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே பாஜகவின் மறைமுகமான திட்டமாகவும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பெரும் அமைதியில் இருப்பது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

ஒருவேளை டெல்லி மேலிடம் மீண்டும் தலையிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை இணைத்துக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் உருவாகலாம். அதையும் மறுப்பதற்கில்லை. அல்லது தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணிக்கு அதிமுக ஆதரவு அளிக்கலாம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

ஆக மறுபடியும் முதலில் இருந்தா?

Updated On: 27 Sep 2023 4:16 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...