தவெக எடுத்த முதல் விக்கெட்..!
செஞ்சி ராமச்சந்திரன்.
தவெக மாநாட்டு வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த மாநில முதல் மாநாட்டில், அரசியல் வி.ஐ.பி.க்கள் பலரும் விஜய்யின் தலைமையில் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கியஸ்தர்கள் அணுகியுள்ளனர்.
அதிமுகவில் செஞ்சியாருக்கு போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதால், விஜய் கட்சியின் கோரிக்கையை நீங்கள் ஏற்கலாம் என அவரது நலன் விரும்பிகள் அறிவுறுத்தியிருப்பதால், செஞ்சியாரும் விஜய் கட்சியில் இணைவது குறித்து விவாதிக்கவும் பரிசீலிக்கவும் செய்திருக்கிறார்.
இதனையடுத்து, த.வெ.க.வில் செஞ்சியார் இணையும் பட்சத்தில் அவருக்குக் கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த், தே.மு.தி.க. கட்சியை ஆரம்பித்த போது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவருமான, பண்ருட்டி ராமச்சந்திரனைக் கட்சியின் அவைத் தலைவராக நியமித்தார் விஜயகாந்த்.
அதே பாணியில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செஞ்சி ராமச்சந்திரனைத் தனது கட்சிக்குள் கொண்டு வரத் திட்டமிட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் விஜய். அதன்பேரில், பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. ஆக, விஜய் கட்சியின் அவைத் தலைவராகிறார் செஞ்சி ராமச்சந்திரன்.
இந்த தகவல்களை எடப்பாடி பழனிச்சாமி வதந்தி என மறுத்துள்ளார். ஆனால் செஞ்சி ராமச்சந்திரன் இதுவரை மறுக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய உண்மை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu