முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: கோர்ட்டில் இன்று விசாரணை

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு:   கோர்ட்டில் இன்று விசாரணை
X
மோசடி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, முன்னாள் அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

இராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் குணசீலன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர். இவர் முன்னாள் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின், அண்ணன் மருமகன். இவர் கடந்த செப்.30ம் தேதி ராசிபுரம் போலீசில், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பண மோசடி செய்ததாக புகார் மனு அளித்தார்.

புகாரில், சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக, 15 பேர் தன்னிடம் ரூ. 76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரி போலீசார், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு கடந்த 29ம் தேதி முன்னாள் அமைச்சர் சரோஜா, நாமக்கல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!