தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்: ஆளுநருக்கு ராமதாஸ் வாழ்த்து

தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்: ஆளுநருக்கு ராமதாஸ் வாழ்த்து
X
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக, பீகார் மாநிலத்தைத் சேர்ந்த ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 1976ம் ஆண்டு கேரளாவில் இருந்து இந்தியக் காவல் பணி அலுவலராகத் தேர்வாகினார். 2019 ம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் 15வது ஆளுநராக ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகள்.

புதிய ஆளுநர் ஆர்.என். ரவி, கேரளாவில் காவல்துறை அலுவலராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால், தமிழகத்தை பற்றி நன்கு அறிந்திருப்பார். தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, கல்வி, தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுக்காக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு புதிய ஆளுநர் துணைநிற்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil