ராகுல்காந்திக்கு பிரியங்கா எழுதிய கடிதம்..!
ராகுல் காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி (கோப்பு படம்)
பிரியங்கா காந்தி ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில்,
உனது சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சகோதரி பிரியங்கா கடிதம் எழுதியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக உருக்கமான கடிதம் ஒன்றை ராகுலுக்கு பிரியங்கா எழுதியிருக்கிறார்.
அதில், மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டம் என்றும், உண்மைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்துக்கும் துணிந்தவர் என்று ராகுலை புகழ்ந்திருக்கும் பிரியங்கா, தனது இதயத்தில் அன்பு, உண்மை, கனிவுடன் அவர் போராடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எப்போதும் போலவே நீ தைரியமாக இரு. மற்றவர்கள் என்ன சொன்னாலும், நீ இப்போது செய்வதையே தொடர வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் பின்வாங்கக் கூடாது, உண்மைக்கான போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடக்கூடாது. உன்னை கோபமும், விரக்தியும் ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை பலரும் இதனையே உனக்கு பரிசாகக் கொடுத்தாலும் கூட, இதுவரை பார்க்காதவர்களும் உன்னை இனி பார்ப்பார்கள், நீ எதற்கும் துணிந்த வீரர் என்று பிரியங்கா தனது சகோதரர் ராகுலை புகழ்ந்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu