எல்லா கட்சிக்கும் சரிந்த ஓட்டுகள்..!
கோப்பு படம்
திமுக 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆனால், பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆக, பாஜக பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் குறைவு என்பதை விட, திமுக, அதிமுக பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என்பதையே இங்கு அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, மூத்த தலைவர் எச்.ராஜா சொல்வதுபோல், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் பாஜக உருவெடுத்திருக்கிறது. ஒடிசா மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலும் பாஜகவின் தடம் பதிய துவங்கியிருக்கிறது.. இதில், ஆந்திர மாநிலம் எதிர்பாராத திருப்பத்தை தந்தாலும், தெலுங்கானா, கர்நாடகாவிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைத்திருக்கிறது.
திராவிட கட்சிகளின் தோள் மீதே சவாரி செய்து பழக்கப்பட்ட பாஜக என்ற பெயரை, தற்போது உடைத்து நொறுக்கியிருக்கிறது தமிழக பாஜக. திராவிட கட்சிகள் இல்லாமலேயே பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் துணிச்சலையும், அனுபவத்தையும், பயிற்சியையும் தற்போது தமிழக பாஜக பெற்றிருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தே போட்டியிடுவோம் என்று மேலிட தலைவர்கள் பலமுறை சொல்லியும் அண்ணாமலை மட்டும் பிடிவாதமாகவே இருந்தாராம். "தனித்தே போட்டியிட்டால் தான் நம்முடைய பலம் என்னவென்று நமக்கு தெரியும்" என்று, கடந்த ஒரு வருட காலமாகவே மேலிட தலைவர்களிடம் எடுத்துரைத்தபடியே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், ரிஸ்க் எடுத்ததன் பலனை தமிழக பாஜக தற்போது அறுவடை செய்து வருகிறது.
12 இடங்களில் பாஜக கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.. தமிழக மண்ணில் தாமரை மலர போகிறதா என்பது கேள்வி. ஆனால் அதற்கான முயற்சிகள் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ளதை இங்கு நாம் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu