உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக தோல்வி: ஓபிஎஸ் சொல்வது என்ன?

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக தோல்வி: ஓபிஎஸ் சொல்வது என்ன?
X

ஓ பன்னீர்செல்வம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் சரிவை சந்திதுள்ள நிலையில், இத்தோல்வி குறுத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளில், இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், பெரும்பாலான நகராட்சிகளை திமுக கைப்பற்றி வரும் சூழலில், அதிமுக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, திருப்பூரில் அதிமுக சரிவை கண்டிருக்கிறது.

தேர்தல் முடிவு குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், திமுகவின் வெற்றி செயற்கையானது. இந்த தேர்தல் முடிவுகள், நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால், அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.

நடந்து முடிந்த தேர்தலானது, முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு கிடையாது. அதிமுக தொண்டர்கள், தோல்வியால் துவண்டுவிடாமல், எந்தவித தொய்வின்றி கட்சி பணியை தொடர வேண்டும். மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியிலான வாய்ப்பு அதிமுக விற்கு விரைவில் அமையும். மக்களின் விருப்பப்படி, மீண்டும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.

Tags

Next Story