தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.,வை வலுப்படுத்த எடப்பாடி புதிய திட்டம்..!
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி
‘சசிகலா, ஓ.பி.எஸ் போன்றவர்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைத்தால் தான் தென்மாவட்டத்தில் வெற்றி பெற முடியும்’ என்று சீனியர்கள் சிலர், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இதில் உடன்பாடு இல்லாத எடப்பாடி, 'தென்மாவட்டங்களில் அமைப்பு ரீதியாகச் சில மாற்றங்களைச் செய்தாலே சரிவிலிருந்து மீண்டு விடலாம்' என்று நம்புகிறாராம்.
அதன்படி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என அமைப்பு ரீதியில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
அதாவது, அந்தப் பகுதி சீனியர்களின் பவரைக் குறைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவிருக்கிறாராம். அவரின் இந்த அதிரடி மூவை அறிந்த மதுரை சீனியர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களைக் கடுமையாக விமர்சித்தும், எடப்பாடியைத் தூக்கிவைத்துப் பேசியும் அதீத விசுவாசத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
‘தங்கள் மாவட்டத்தில் மட்டுமாவது அந்தப் பவர் குறைப்பு முடிவைக் கைவிடுவார் எடப்பாடி என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள்’ என்கிறார்கள் மதுரை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மூவ் எந்த அளவு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் புதிய இளரத்தம் பாய்ச்சுவதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் இருக்கிறார்களா என்று கட்சியின் சீனியர்கள் கிண்டலாக சிரிப்பதாகவும் கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் இந்த முடிவால் கட்சியில் இப்போது இருக்கும் இந்த கட்டமைப்பும் சீர்குலைந்துவிடப்போகிறது என்று அச்சம் தெரிவிப்பதாகவும் கூறுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu