/* */

மோடியின் மூன்றாம் பரிமாணம், சற்று கூர்மையாக கவனியுங்கள்..!

மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெறப்போகிறார். பாஜக 400 இடங்களையும் காங்கிரஸ் 40 இடங்களையும் வெல்லலாம்.

HIGHLIGHTS

மோடியின் மூன்றாம் பரிமாணம், சற்று கூர்மையாக கவனியுங்கள்..!
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்பதை அரசியல் கருத்தாய்வுகள் மட்டுமல்ல, வருங்கால இந்தியாவின் மாற்று அரசியலை தீர்மானிக்கப் போகிற விஷயமும் கூட. அந்த வெற்றி மோடிக்கானது என்றால் நாம் மிகப்பெரிய தவறு செய்கிறோம். அது நாட்டுக்கான இரண்டாவது முழு சுதந்திரம். அதை கொண்டு செலுத்த வேண்டுமெனில் நமக்கு சரியான புரிதல் வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் சரியாக இருக்க வேண்டும்.

அது மோடி மட்டும் செய்ய முடியாது. அதற்கு நம் பங்களிப்பு அவசியம், அது செயல்படுத்துவதை வேகப்படுத்தும், வீரியப்படுத்தும். அடுத்த ஆட்சியில் என்ன மாதிரியான மாற்றங்களை மோடி அரசிடம் எதிர்பார்க்கலாம்? நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன எதிர்பார்க்கலாம்?

இன்று வாழத்தகுதியில்லாதவன் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதும், வாட்ச்மேன் வேலைக்கு கூட தகுதி இல்லாதவன் கூட நாடாள்வதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கருப்பு பணம் மட்டுமல்ல வாக்காளர்களின் தவறு மிக அதிகம். அவர்களை தவறாக வழி நடத்த இந்த கருப்பு பணம் உதவுகிறது.

அப்படியெனில் அந்த கருப்பு பணத்தின் ஆதிக்கம் அரசியலில் குறைந்தால், அவர்கள் வீழ்ச்சி உறுதியாகிவிடும். அது பெருமளவில் கட்டுப்படுத்த, டிஜிட்டல் கரன்ஸி அதற்கு மிகப்பெரிய அளவிலும், எலெக்ட்ரானிக் ட்ரான்ஸேக்ஷன் மறுபுறமும், கம்யூட்டரைசேஷன் மொத்தமாகவும் உதவும்.

அதற்கு, நாம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தவிர்த்தால், தேர்தலில் போட்டியிட என்னிடம் காசு இல்லை என்று ஒரு நேர்மையானவர் சொல்ல வேண்டி இருக்காது. அப்படியெனில் நல்லவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் போட்டியிட்டு வெல்ல முடியும்.

அதாவது சாக்கடையில் நன்னீர் அதிகமானால், அங்கே மீன்கள் போன்ற உயிரினம் பெருகி, அதிலிருக்கும் சாக்கடையை சுத்தப்படுத்தி விடும். அதற்கு நல்லவர்கள் பலர் அரசியலில் நுழைய வேண்டும். குறிப்பாக, தங்கள் குடும்ப கடமையை செய்து முடித்தவர்கள், அரசியலில் எதிர்பார்ப்பு இல்லாமல் பணி செய்ய முன்வர வேண்டும்.

உடனே பாஜகவில் சேரவேண்டும் என்று அர்த்தமல்ல, காங்கிரஸ் கட்சியில் மாற்று சிந்தனை உள்ள, நாட்டுப்பற்று மிக்க, நல்லவர்கள் அதிகமாக சேரவேண்டும். அங்கே இருக்கும் தவறானவர்களை வெளியேற்றி சுத்தப்படுத்த வேண்டும். அந்த கட்சி பாஜகவிற்கு மாற்றாக இந்திய அளவில் மீண்டும் உயர வேண்டும். மாநில கட்சிகள் அழிய, அழிக்கப்பட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அரசியல் தலைவர்களின் குறுக்கீடல்கள் நிர்வாகத்தில் குறையத்தொடங்கும். அதாவது கட்சிக்காரன் காவல் நிலையத்தில் கால்வைக்கும் உரிமை எல்லாம் மெதுவாக குறையும். அதற்கு மிகமுக்கிய பாதை எல்லாவற்றையும் கணினி மயமாக்குதலே.

அவர்கள் பணி சட்டம் இயற்றுவது மட்டுமே. சரிபார்ப்பது என்பது அவர்கள் நேரடியாக செய்ய முடியாது. இதன் மூலம் அரசியல்வாதிகள் என்பவர்கள் வானளாவிய அதிகாரம் கொண்ட நட்சத்திரங்களாக இல்லாமல், அவர்களும் சாதாரண அங்கங்களாக மாறுவார்கள்.

அதன் மூலம் சட்டம் ஒழுங்கு முதல், சாக்கடை கிளீனிங் வரை செய்ய சிஸ்டம் கிரியேட் செய்வார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கட்டமைப்பு மிக மிக அவசியம். ஒருவரின் பயண நேரம் குறைந்து, தூரம் அதிகமானால், நாடு வளர்ச்சி பெறும். அதற்கு சாலை வசதிகள் மேம்படுத்த வேண்டும், பொருட்களை விரைவில் கொண்டு செல்ல கூட்ஸ் ரயில் முதல் கப்பல்கள், உள்நாட்டு நீர்வழி, வான்வழி என்று பல வகைகளில் அந்த கட்டமைப்புகள் வேகமாக வளர்ந்திருக்க வேண்டும்.

அப்படியெனில். அதற்கு நாமும் பங்காற்ற வேண்டும். ஆம் விரைவு சாலைகளில் செல்லும் நம் வாகனங்களுக்கு டோல் கட்டணங்கள் செலுத்த வேண்டும். அது முன்பு இருந்தது போலல்லாம், டோல் நிலையம் இல்லாமலேயே அதை மேம்படுத்தப்பட்ட சேட்டிலைட் ட்ராக்கர் மூலம் அதை செய்வார்கள்.

FasTag வருவதற்கு முன்பு 90% வரை டோல் கட்டணங்கள் திருடப்பட்டது. இன்று அது 10% கீழ் குறைந்துள்ளது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் தங்கள் காருக்கு டோல் கட்டாமல் ஏமாற்றி செல்ல முடியாது. மாறாக அவர்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். அந்த சிஸ்டத்திற்கு அரசு அதிகாரி யார், அரசியல்வாதி கார் எது என்று வித்தியாசம் பார்க்க தெரியாது.

அந்த வருவாய் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் 80% நாடு ஒரு நல்ல சாலை வசதியையும், கூட்ஸ் ரயில்களுக்கு தனி பாதைகளும் செய்து அவை இரண்டும் ஒவ்வொரு துறைமுகத்தோடு இணைக்கப்படும். அரசு வரிமேல் வரி மட்டும் போட்டால், மக்கள் மீது அது சுமத்தப்பட்டால், வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். அது இன்னும் சில ஆண்டுகள் சுமையாகவும், பின்பு சுகமாகவும் மாறும்.

மேற்சொன்ன கட்டமைப்புகள் தொழில் துறையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கி அதிகரிக்கும். நமது ஆயுதங்களின் உற்பத்தி அதிகரித்து மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இன்று பீரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பீரங்கி குண்டின் விலை 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை. இன்று உலகின் மேம்பட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் 100 குண்டில் 79% முதல் 86% குண்டுகள் தான் வெடிக்கிறது. சீனாவில் தயாரிக்கப்படும் குண்டுகள் 66% க்கும் கீழேதான் வெடி திறன் இருக்கிறது என்பதால் அதை வாங்க ஆட்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் குண்டுகள் 91% முதல் 96% வரை தரமானதாக உள்ளது.

உக்ரைன் சண்டைக்கு பின்னால், அமெரிக்கா, ரஷ்யா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் 40% கூட குண்டுகள் ஸ்டாக்கில் இல்லை. அதை உற்பத்தி செய்தும் திறன் இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை முதல், தேஜாஸ் விமானங்கள், வரை வளரும். இந்தியா மேற்கத்திய நாடுகளில் இருக்கும் G&E, Boeing போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து, இந்தியாவில் அதன் உற்பத்தியை விஸ்தரிக்கும்.

அப்படியெனில் அடுத்த ஐந்தாண்டுகளில் நமது ஆயுத ஏற்றுமதி, அமெரிக்க ஏற்றுமதியில் 30% த்தை தொட முடியும். உலக நாடுகள் விவசாய உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய நாடாக இருந்தாலும், நாம் ஏற்றுமதியில் பின் தங்கி உள்ளோம். உற்பத்தி வெகுவாக அதிகரிக்க வேண்டும். அதை செய்ய புதிய விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரவேண்டும். அதன் மூலம் ஒப்பந்த விவசாயம் அதிகரித்து, விவசாயம் லாபம் சார்ந்த துறையாக மாறும்.

இன்று திருப்பூரில், நூல்விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால், நாம் சீனாவில் இருந்து செயற்கை நூலிழையை இறக்குமதி செய்கிறோம். காரணம் எப்போது பஞ்சு விலை உயரும் என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு மாற்றாக, எனக்கு அடுத்த வருஷம் இவ்வளவு பஞ்சு தேவை என்று கம்பெனிகள் முன்கூட்டியே சொன்னால், அதற்கு ஏற்ப, விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டு, அதை விளைவிப்பார்கள். விலை ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டதால் அங்கே வருமான இழப்பு என்பது விவசாயிகளுக்கு இருக்காது.

ஆம் தக்காளி கிலோ ₹100 விற்கிறது என்று எல்லோரும் அதை உற்பத்தி செய்து அதை ₹1 ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லாமல் போவது தடுக்கப்படும். தேவைக்கு ஏற்ப மட்டும் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். உற்பத்தி பொருட்களை கட்டுப்பாடான முறையில் ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்திய சந்தைகளில் விலைவாசி உயர்வில்லாமல் நாம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

ஆனால் விவசாயிகளுக்குள்ள மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் பற்றாக்குறை. அதை தீர்க்க வேண்டுமானால் நதிகளை இணைக்க வேண்டும். இன்று சிந்து நதியின் கிளை நதிகளான மூன்று நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு கொண்டு செல்ல, பஞ்சாப், ஹரியானா அனுமதிக்க மறுக்கிறது. 80% பயன்படுத்தும் உரிமை இருந்தும், அதை பாகிஸ்தானுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

அதற்கு காரணம் பிரிவினை மனதுடைய மாநில கட்சிகளின் ஆட்சி. பிரிவினை எண்ணம் கொண்ட கட்சிகள் வீழ்த்தப்பட்டால் மட்டுமே , இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் மிக அதிகம். அதன் பின்னர் இந்திய நதிகள் இணைக்கப்படும். அது ஏற்கனவே இந்த திட்டம் தொடங்கி நடந்து வருவதை பலர் அறிந்திருக்கவில்லை. சத்தமில்லாமல் மோடி அரசு செய்து வருகிறது.

தொழில்கள் சிறக்காததற்கு காரணம் நம்மிடம் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள் இல்லாததல்ல. என்ன தொழில் செய்வதென்று தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு ஹோட்டல் போன்ற தொழில்களில் முதலீடு செய்கிறார்கள். அதனாலும் தானும்.கெட்டு, ஏற்கனவே வைத்திருந்தவனையும் கெடுக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களிடம் நல்ல தொழில் ஐடியாக்கள் இல்லை.

அதை தீர்க்க, அரசு பல உதவிகளை தொழில் முனைவோருக்கு கொடுக்கிறது. ஆனால் நல்ல தொழிலுக்கான ஐடியாக்களை கொடுக்க நம்மிடம் சிறந்த கல்விக்கூடங்கள் இல்லை.

அதை மேம்படுத்த பல IIT க்கள், IiM, AIMS போன்று பல மேம்பட்ட கல்விக்கான கட்டமைப்பை ஒரு புறமும், மறுபுறம், நல்ல அடிப்படை கல்வியை தர மத்திய அரசே பல கல்விக்கூடங்களை, பள்ளிகளை நிறுவி இலவச கல்வியை தரப்போகிறது. அப்போது ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கொடுத்து, திராவிட முதலைகளின் தனியார் கல்வி நிலையத்தில் கற்க தேவை இருக்காது.

நமது கல்விக்கூடங்கள் கொடுக்கும் மேம்பட்ட கல்வி மூலம் மிக உயர்ந்த கல்வி கிடைக்கும். இன்று மேலை நாடுகளில் கிடைக்கும் கல்வி போன்று நமது கல்வி சேவைகள் அதிகரித்தால், வெளி நாடுகளில் இருந்து கல்வி பயில இங்கே வருவார்கள். நம் மாணவர்களும், சிறந்த கல்வி கிடைப்பதால் உலகெங்கும் பணி புரிவதன் மூலம் மிகப்பெரிய அன்னிய செலாவணியும், புதிய அனுபவ அறிவும் கிடைக்கும்.

நமது கல்வி சார்ந்த தொழில்களான் மருத்துவம் பெருகி, உலகளவில் இந்தியாவில் மருத்துவ சேவைகளுக்காக இங்கே Medical Tourism என்ற பெயரில் பெருமளவில் வருவார்கள்.

அதனால் நாம் கொடுக்கும் வரி என்பது அரசு இதுபோன்ற வகையில் மக்களுக்கு தரமான சேவைகளை செய்யும் என்றால் நாம் வரிகட்ட தயங்குவோமா? மாற்று எரிசக்தி மூலம், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை வெகுவாக குறையும். அதன் தேவைகளை குறைக்க வேண்டுமெனில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். அதற்கு அதிக வரி போடாவிட்டாலும், இப்போது இருக்கும் வரிகள் தொடர்வதால், அதன் மூலம் முக்கிய வருமானம் தொடரும்.

அதையும் தாண்டி நமது கச்சா எண்ணெய் இறக்குமதி என்பதை செய்து வெளி நாடுகளுக்கு பெட்ரோல், டீசலாக ஏற்றுமதி செய்வோம். அதில் எத்தனால் போன்றவையும் கலக்கப்படுவதால், நமது கரும்பு போன்ற விவசாய பொருட்களின் விலை உயர்ந்து விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

உலகில் குண்டூசி தயாரிப்பது முதல், கப்பல் கட்டுவது வரை நமது தொழில்கள் பெருகும். அதற்கு நாம் இப்போது கட்டும் விமானந்தாங்கி கப்பலும், புல்லட் ரெயில் சேவையும் நம் தொழில் நுட்பத்தை பெருக்கிக்கொள்ள வேகமாக உதவி, வளர்ச்சி அதிகரிக்கும். இன்று நமது வந்தே பாரத்தில் பயன்படுத்தும் ரயில் என்பது அதிவேகத்தில் செல்லக் கூடியது. ஆனால் அதன் உச்சபட்ச வேகத்தில் செல்ல அதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

மேலை நாடுகளில் அந்த கட்டமைப்பு உள்ளதால், மற்ற நாடுகள் தயாரிக்கும் ரயில்களை விட நமது ரயில்கள் 30% க்கு மேல் விலை குறைவு, தரம் அதிகம். அதனால் அதற்கு ஆர்டர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து குவிகிறது. ஆனால் நம்மால் எல்லா ஆர்டர்களையும் ஏற்க நம்மால் முடியவில்லை.

நாம் புல்லட் ரெயில்களை இயக்கும் போது, அதிலுள்ள புது தொழில் நுட்பங்கள் மேலும் நமது வந்தே பாரத்தின் தரத்தை உயர்த்தும். எனவே கஞ்சி குடிக்க வழி இல்லாதவர்கள் வாழும் நாட்டில் புல்லட் ரெயில் எதற்கு என்று கேட்காதீர்கள். ஏனெனில் அவர்களுக்கு வேலை கொடுத்து, அவர்களே உழைத்து சாப்பிட, நாம் அதிலிருந்து கற்கும் தொழில் நுட்பங்கள் வழிவகை செய்யும்.

எனவே அடுத்த 10 ஆண்டுகளில் நமக்கு வேலைக்கு ஆட்கள் போதுமானதாக இல்லாமல் போய்விடும். அப்போது பங்களாதேஷ், நேபாள், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்து இங்கே வந்து வேலை செய்ய வரும் நிலை ஏற்படும். அதனால் இந்தியா அந்த நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் போல, மீண்டும் இணையும். இருந்தாலும் தனித்தனி நாடுகளாகவே அது தொடரும்.

இவையெல்லாம் இருந்தாலும், பணக்கார நாடாக இருந்தாலும், ஒரு நாடு பாதுகாப்பு இல்லாவிட்டால் நேற்று லிபியா, ஈராக், இன்று உக்ரைன் போல வீழ்ந்து விடும். அதனால் உலகின் மிகச்சிறந்த, பலமான ராணுவத்தை கொண்ட நாடாக மாறும். உலகில் எங்கே அநீதி நடந்தாலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் அளவில் ஏழை நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதன் மூலம் வல்லரசாகவல்ல நல்லரசாக மாறி உலகின் விஸ்வ குருவாக உலகத்தில் தர்மத்தை போதித்து, ஒழுக்கத்தை வளர்த்து, சகோதரத்தை ஏற்படுத்தி, அமைதியை நிலை நாட்டும்.

அதற்கு மேலாக இந்தியாவில் சுற்றுலா என்பது மெடிக்கல் டூரிஸம் முதல், ஆன்மீக சுற்றுலா வரை விரிவடையும். அதற்கு நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு மட்டுமல்ல, பாதுகாப்பு, வசதியான போக்குவரத்து. சுகாதாரம் என்று எல்லாம் உயரவேண்டும். தூய்மை இந்தியா அதற்கு மிக முக்கிய காரணம்.

முன்பு சுற்றுலா தளங்களை சுற்றி மலஜலம் என்பது அறுவெறுப்பாக இருக்கும். இன்று அந்த நிலை வெகுவாக மேம்பட்டு உள்ளது. காரணம் தூய்மை இந்தியா மூலம் கட்டிக்கொடுத்த இலவட கழிப்பிடங்கள். ஆனால் இன்னும் அது சிறப்படைய வேண்டும்.

ஆம் நாம் மட்டும் வாழ்ந்தால் அது சுயநலம், அதை நம் தர்மங்கள் நமக்கு என்றும் போதிக்கவில்லை. மாறாக, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லோரும் உயரவேண்டும், உலகத்தை உயர்த்த வேண்டுமெனில், உங்கள் வாக்கினை மோடிக்கு அளிப்பது மட்டுமல்ல, இவற்றை, எதிர்கால வாய்ப்புகளை விளக்கி மற்றவர்களை வாக்களிக்க வைக்கவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 பேருக்கு மோடியின் அடுத்த ஆட்சிக்கான எதிர்காலத்தை காட்சிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய வெற்றியை நாட்டுக்கு கொடுப்பது நமது கடமை. இணைவோம் நட்பாக, வெல்வோம் நாடாக.

Updated On: 1 April 2024 6:04 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 2. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 3. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 4. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 5. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 6. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 7. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 8. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
 9. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 10. ஈரோடு
  ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...