அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் எப்போது? அமைச்சர் சேகர் பாபு பதில்

அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் எப்போது? அமைச்சர் சேகர் பாபு பதில்
X

புனித பவுல் தேவாலயத்தில், தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

விரைவில் அமைச்சரவையில் உதயநிதி இடம் பெறுவார் என்று, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள புனித பவுல் தேவாலயத்தில், தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதில், 2000 ஏழை எளிய மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் மற்றும் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சிறுபான்மையினருக்கு எப்போதும் உறுதுணையாக திமுகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். திமுகவுக்கு உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் வழங்கக் கூடியவர். எனவே, நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைதேர்தல்களில் உதயநிதி ஸ்டாலினும் மக்கள் பணியற்றி வருகிறார், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும். உதயநிதி ஸ்டாலின், விரைவில் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்