லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் மக்கள் நீதி மய்யம்-கமல்ஹாசன்
லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மையம் கமலஹாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் பிரபு பட்டேல் லட்சத்தீவின் நிர்வாகியாக பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது. புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதை இந்த சூழலுக்கு காரணம்.
எல் டி ஏ மசோதா பூர்வகுடிகளின் வாழ்விடங்களை பறிக்கும் அபாயம் இருப்பதால் பழங்குடியின மக்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். பாசம் உரிமைகளுக்காக போராடுபவர்களின் குரல் கொடுக்கும் அடக்குமுறைச் சட்டமாக இருக்கிறது. லட்சத்தீவு பகுதியில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுகளில் அசைவ உணவு இடம்பெறாது எனும் அறிவிப்பு உள்நோக்கமுடையது மாட்டிறைச்சி பயன்பாட்டிலும் அரசின் தலையீடு இருக்குமோ எனும் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது.
இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளவர்களின் குடும்பத்திலிருந்து கிராம பஞ்சாயத்துகளில் உறுப்பினராகவோ பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என மசோதாவும் ஜனநாயகத்திற்கு எதிரானது.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரபு பட்டியலின் நிர்வாகம் சோபிக்கவில்லை கடந்த ஆண்டுக்கான தொற்று இல்லாத தீவில் முன்யோசனை இன்றி கட்டவிழ்த்து விடப்பட்டு தவறுகள் என்று உயிர்களை காவு வாங்குகின்றன.
புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவின் அழகையும் சுற்றுப்புறச் சூழலையும் மக்களின் உரிமைகளையும் ஒருசேர அளிப்பதாக உள்ளது லட்சத் தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu