பா.ஜ.வில் இணைபவர்கள் பட்டியல்: மத்திய மந்திரி எல்.முருகன் சொல்வது என்ன?

பா.ஜ.வில் இணைபவர்கள் பட்டியல்: மத்திய மந்திரி எல்.முருகன் சொல்வது என்ன?
X

கோவையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மோடி முன்னிலையில் பா.ஜ.வில் இணைபவர்கள் பட்டியல் சம்பந்தமாக மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்தார்.

பாரதிய ஜனதாவில் யார் யார் இணைய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என மத்திய அமைச்சர் எல் முருகன் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாளை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெறுகின்றது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி புண்ணிய பூமியாம் ராமேஸ்வரம் தீவில் என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கினார். அவரதுயாத்திரை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

எந்த அரசியல் கட்சியும் செய்யாத வகையில் மிக பிரமாண்டமான மாநாடு நடைபெறுகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் உள்ள திமுக அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்து செல்லும் யாத்திரையாகவும், திமுகவின் இயலாமையை எடுத்து சொல்லும் விதமாகவும், பிரதமரின் 10 ஆண்டு சாதனையை எடுத்து செல்லும் விதமாகவும் அமைந்தது. இந்த யாத்திரை 234 தொகுதிகளிலும் மிக வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு அளித்தார்கள். மக்கள் நாளை நடைபெறும் நிறைவு விழாவில் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் ஊர் தோறும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கின்றது. திமுக நிர்வாகியே 3000 கோடி போதை பொருள் கடத்தலி்ல் ஈடுபட்டுள்ளார். திமுக போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த விஷயத்தில் திமுக தலைவர் ஸ்டாடலின், திமுக நிர்வாகி சம்மந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பாஜகவில் யார் எல்லாம் இணைகின்றார்கள் என்பதை சிறிது நேரம் பொறுத்து இருந்து பாருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பொதுகூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு மத்திய அமைச்சர் எல் முருகன் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!