தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவது எளிது : பா.ஜ.க.,வினர் போடும் புதிய கணக்கு..!
திராவிட முன்னேற்றக் கழகம் (கோப்பு படம்)
தேசப்பற்றாளர் ந.முத்துராமலிங்கம் (இதே பெயரில் இப்படி ஒரு அடைமொழியுடன் சமூக வலைதளங்களில் பலநுாறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். வெளியிட்டும் வருகிறார்.) என்பவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது:
கடந்த 2014-ல் நடந்த RK நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளரை களம் இறக்கவில்லை. கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன் நின்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 ஓட்டுகள் பெற்றார். அதாவது பதிவான ஓட்டுகளில் 88.43 சதவீதம் ஜெயலலிதா பெற்றார்.
இப்பொழுது எனது சந்தேகம் எல்லாம், அ.தி.மு.க-வின் நேர் எதிரியான தி.மு.க தொண்டர்கள், தி.மு.க களம் காணாத நிலையில் ஒன்று வாக்களிக்காமல் இருந்திருக்க வேண்டும். அல்லது எதிர்த்து கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், ஏன் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தனர்?. அடுத்து அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க வின் சார்பில் சிம்லா முத்துச்சோழன் நின்றார். இதில் அவர் பெற்ற வாக்குகள் 57, 673 மட்டுமே. இந்த தேர்தலிலும் ஜெயலலிதா 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த இடைத் தேர்தலில் TTV தினகரன் சுயேச்சையாக நின்று நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் தி.மு.க வின் மருதுகணேஷ் வெறும் 24,000 வாக்குகள் மட்டுமே பெற்று டிபாஸிட்டைப் பறி கொடுத்தார் .அதாவது ஜெயலலிதா இருக்கும் பொழுது சிம்லா முத்துச்சோழன் பெற்ற வாக்குகள் கூட அடுத்து வந்த தேர்தலில் தி.மு.கவினால் பெற முடியவில்லை.
இது தான், தமிழகம் முழுவதும் தி.மு.க வின் உண்மையான பலம். பணம் கிடைத்தால் தனது சொந்தக் கட்சிக்குக் கூட வாக்களிக்காத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தி.மு.க. என்பது ஆர்.கே.நகர் தேர்தல்களில் நிரூபணம் ஆகி உள்ளது. தமிழகம் முழுவதும் இதே மனநிலையில் தி.மு.க., உறுப்பினர்கள் உள்ளனரா? என்பதை அறிய ஒருமுறையாவது தி.மு.க., தனித்து களம் காண வேண்டும். அப்போது தான் அந்த கட்சியின் உண்மையான ஓட்டு சதவீதம் என்னவென்று மக்களுக்குத் தெரியும்.
கடந்த கால நிகழ்வுகளிலிருந்தும் நிகழ்கால நடப்பிலிருந்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தி.மு.க ஒன்றும் மிகப் பெரிய வாக்கு வங்கி கொண்ட கட்சி அல்ல. அதன் தொண்டர்களே கூட சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வாக்களிக்கக் கூடியவர்கள் என்பதே. ஆனால், இவர்கள் இங்கே நாளொரு மேனியும், பொழுதொறு வண்ணமும் தாமரை மலராது, தாமரை மலராது என்று மேடைக்கு மேடை கூறுவது. அவர்களது தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
இன்றைய தேதியில் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பா.ஜ.க மட்டுமே உள்ளது கடந்த மாதம் தந்தி TV எட்டாயிரம் பேரிடம் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பில் கூட 39% மக்கள் மோடியை விரும்புவதாக வாக்களித்திருந்தனர். தமிழகத்தைப் பொருத்தவரை இது மிகப் பெரிய முன்னேற்றம். அதே சதவீதத்தை மொத்த வாக்காளர்களுக்கும் பொருத்திப் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு கோடி வாக்காளர்கள் மோடி ஆதரவு மனநிலையில் இருப்பது தெளிவு. இந்தச் சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து வரும் நிலையில், பா.ஜ.க., போதுமான வலுவான கூட்டணி அமைந்து விட்ட நிலையில் தி.மு.க.,வை எளிதில் வீழ்த்தலாம்.
தி.மு.க., காங்., மதி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க., கூட்டணியை எளிதில் தோற்கடிக்கலாம். ஜெய் மோடி சர்க்கார். மீண்டும் மோடி சர்க்கார். தேசப்பணியில் என்றும் ந.முத்துராமலிங்கம் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu