லண்டனுக்குப் போகும் அண்ணாமலை..! செயல் தலைவராகிறாரா தமிழிசை?
தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)
தமிழக பா.ஜ.க-வின் மாநில செயற்குழுக் கூட்டம் விரைவிலேயே கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருக்கிறாராம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இடைத்தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு, லண்டனுக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழிசை சந்தித்துவிட்டுத் திரும்பியதையும் முடிச்சுப்போட்டு, ‘அண்ணாமலை ஊருக்குத் திரும்பும் வரை, செயல் தலைவர் தமிழிசைதான்’ என்று கொளுத்திப்போட ஆரம்பித்திருக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
இது பற்றி விசாரித்தால், “அரசியல் தொடர்பான ஒரு கோர்ஸ் படிப்பதற்கு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார் அண்ணாமலை. மூன்றரை மாதங்கள் அங்கேயே தங்கியிருக்கவும் முடிவெடுத்திருக்கிறார். அவர் ஊரில் இல்லாத காலத்தில், செயல் தலைவராகச் செயல்பட தமிழிசை செளந்தரராஜன் தரப்பினர் இப்போதே காய்நகர்த்தத் தொடங்கி விட்டார்கள்” என்கிறது கமலாலய வட்டாரம்.
உள்துறை அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பில் இந்த விஷயமும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷா இதற்கு என்ன பதில் சொன்னார் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழக பா.ஜ.க., செயல்தலைவர் பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவி, அல்லது மீண்டும் கவர்னர் பதவி என ஏதாவது ஒரு பதவி கிடைக்கும். மேலிடத்தில் தமிழிசைக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என தமிழிசை ஆதாரவாளர்கள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu