பாட்னாவுக்கு வந்தார்கள்... கலைந்து சென்றார்கள்
பைல் படம்
15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டபடி ஜூன் 23, 2023 அன்று பீகார் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன. அது பற்றி பார்க்கலாம்.
1. டெல்லி அவசரச் சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று குற்றஞ்சாடியது ஆம் ஆத்மிக் கட்சி.
2. 370 வது பிரிவை ரத்து செய்த போது பாஜக அரசாங்கத்தை முன்பு ஆதரித்த அரவிந்த் கெஜ்ரிவாலை உமர் அப்துல்லா தாக்கிப் பேசினார்.
3. இந்தப் பீகார் கூட்டத்தை மம்தா ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பீகார் இயக்கத்துடன் ஒப்பிட்டார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், 1970-களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாகன அணிவகுப்பை அன்று காங்கிரஸில் இருந்த மம்தா வழிமறித்து கார் முகப்பில் நடனமாடினார்.
4. 1970-களில் ஜேபி தலைமையிலான இயக்கத்தில் இருந்த நிதிஷ் குமாரும் லல்லு பிரசாத் யாதவும் காங்கிரஸுக்கு எதிராக போராடினர். இப்போது அதே காங்கிரஸோடு இணக்கமாக இருக்கின்றனர் நிதிஷ்குமாரும் லல்லுவும். இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ராகுலிடம் விசாரிக்கும் அளவுக்கு லல்லு காங்கிரஸோடு தோழமையுணர்வோடு இருக்கிறார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியின் இந்தி எதிர்ப்புக் கொள்கையை கொஞ்சநேரம் ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் இந்தியில் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
"இந்தி தெரியாது போடா" என்ற கோஷத்துடன் முன்பு டி-ஷர்ட் அணிந்து வலம் வந்தவர்கள் தி.மு.க.வினர் என்பது பெரிய நகைமுரண். மேலும், பாட்னா நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. காரணம், அவர் வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தார் என்று அவர் கூறினார். ஆனால் உண்மை என்னவென்றால், அது அவருக்காக பிரத்யேகமாக தயாராக இருந்த விமானம். எனவே அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். ஆனால் ஏனோ தெரியவில்லை, அவர் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்கள் சுப்ரியா சுலே, பிரபுல் படேல், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, ஜேகேஎன்சி தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாஜகவுக்கு எதிரான ஒன்றிணைந்த கூட்டணியை உருவாக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சியிலிருந்து விலகிக் கொண்டனர்.மொத்தத்தில் அவர்கள் வந்தார்கள்; கலந்து பேசினார்கள். பின் கலைந்தார்கள், எந்தவொரு வலுவான நம்பிக்கையையும் உருவாக்கமல். ஜூலை 12ம் தேதி சிம்லாவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu